வங்கி சேமிப்பு கணக்குகளில் குறைந்த அளவு இருப்புத்தொகை மற்றும் பணம் கையாளும் கட்டணத்தை உயர்த்த வருகிற 1 ஆம் தேதி முதல் வங்கிகள் முடிவு செய்துள்ளன. கிராமப்புற மற்றும் நகர்ப்புற வங்கி கிளைகளுக்கு ஏற்ப மின்மம் டெப்பாசிட் மாறுபடும். இதற்கு மேல் டெப்பாசிட் குறைவாக இருந்தால் அபராதம் வசூலிக்கப்படும் என்று பல்வேறு வங்கிகள் முடிவுகளை வெளியிட்டுள்ளன.
குறிப்பாக பாங்க் ஆப் மகாராஷ்டிராவில் முன்பு ரூ.1,500 ஆக இருப்புத்தொகை தற்போது ரூ.2,000 ஆக உயர்த்தப்படுகிறது. இரண்டாயிரத்திற்கு கீழ் மினிமம் பேலன்ஸ் குறைந்தால் கிராமப்புற வங்கி கிளைகளில் ரூ.20 மற்றும் பெருநகரங்களில் ரூ.75 அபராதம் வசூலிக்கப்படும். அதேபோல் நடப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் சராசரி இருப்பு ரூ.5,000 ஆக நிர்ணயிக்கப்படுகிறது.
மேலும் பணம் எடுப்பது மற்றும் டெப்பாசிட் செய்வதற்கு 3 முறை மட்டுமே இலவசம். அதன் பிறகு செய்யப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.100 வசூலிக்கப்படும் என்று மகாராஷ்டிரா வங்கி நிர்வாக இயக்குநர் ராஜீவ் கூறினார். இவை டிஜிட்டல் பரிவர்த்தனைக்காக ஊக்குவித்துள்ளதாக தெரிவித்தார்.
இதேபோல் ஆக்சிஸ் வங்கி இசிஎஸ் பரிவர்த்தனைக்கு ரூ.25 வசூலிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரூபாய் 10, இருபது, ஐம்பது போன்ற குறைந்த மதிப்பிலான நோட்டுகளை கையாள, 1000 எண்ணிக்கைக்கு ரூ.100 வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இந்த கட்டணங்கள் கிடையாது. கோடெக் மகேந்திரா வங்கியில் சேமிப்பு கணக்கு மற்றும் சம்பள கணக்குகளில் 5 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும். இதற்கு பிறகு பணம் எதுக்கு ரூ.20 வசூலிக்கப்படும். இருப்புத் தொகை பார்க்க ரூ.8.50 வசூலிக்கப்படும். மேலும் கணக்குகளுக்கு ஏற்ப பணம் எடுக்க நான்காவது பரிவர்த்தனைக்கு ரூ.100 வசூலிக்கப்பட உள்ளது.