Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வாடிக்கையாளர்கள் தலையில் பாறாங்கல்லை போடும் வங்கிகள்!! 

 

இந்திய நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகள் தங்களது வாராக் கடன்களை அதிகளவில் தள்ளுபடி செய்து ஒரு மோசமான தன்மையை சமீப காலமாக கடைபிடித்து வந்துள்ளது புதிய தகவல்களின் மூலம் தெரியவந்துள்ளது.

அதாவது பொதுத்துறை வங்கிகள் ரூ.5,48,734 கோடி மதிப்புள்ள கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. இது அதற்கு ஆண்டு தள்ளுபடி கடன் ஆறு மடங்கு அதிகம்என்று அகில இந்திய வங்கிஊழியர் சங்கம்(AIBEA) வெளியிட்ட தகவல் மூலம் தெரியவந்துள்ளது.

2008 முதல் 2013 ஆம் ஆண்டு வரையிலான  காலகட்டத்தில் வங்கிகள் ரூ.86,528 கோடி கடனை தள்ளுபடி செய்ததாக தகவல்கள் வெளியாகிறது.

பெரும்பாலும் கார்ப்பரேட் நிறுவனங்களின் பெரும் தொகையை உடைய கடன்களை வங்கிகள் தடை செய்கின்றன என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் ஏற்கனவே குற்றம் சாட்டி வருகின்றது.

இறுதியில்  இந்த இழப்புகளை ஈடுசெய்யும் பெரும் சுமை வரி செலுத்துவோர் மீதும், வாடிக்கையாளர்கள் மீது விழுகின்றது. அதிபர் சேவை கட்டணம் வசூல் கட்டணம் வசூலிப்பது, நிரந்த வைப்புதொகை,சேமிப்புக் கணக்கு போன்றவற்றில் வட்டி வருவாயை குறைப்பது போன்ற நடவடிக்கைகளை மங்கை எடுப்பதால் வாடிக்கையாளர்கள் வாதிக்கின்றனர்.

பல கோடிக் கணக்கில் லாபம் ஈட்டும்  கார்ப்பரேட் கடன்களை தள்ளுபடி  செய்யும் வங்கிகள் சாதாரண மக்களிடம் கடுமையாக தாக்கங்களை ஏற்படுத்துவதை அவர்களின் தலையில் பாறாங்கல்லை சுமப்பதற்கு சமமாகும்

 

Exit mobile version