Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வங்கியில் இனி இந்த சேவைகளுக்கும் வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் !

வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு சில சேவைகளுக்கு கட்டணங்களையும், சில சேவைகளை இலவசமாகவும் செய்து தருகிறது. உதாரணமாக வாடிக்கையாளர்களுக்கு இலவச ஏடிஎம் கார்டு, காசோலை புத்தகம் மற்றும் ஆன்லைன் சேவைகள் போன்ற சேவைகளை வங்கிகள் இலவசமாக வழங்குகின்றன. அதேசமயம் சில சேவைகளுக்கு ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குப் மேல் வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கிறது. வங்கிகள் தனது வாடிக்கையாளர்களுக்கு விதிக்கக்கூடிய கட்டணங்கள் வங்கிக்கு வங்கி மாறுபடுகிறது. இப்போது எந்த விதமான சேவைகளுக்கெல்லாம் வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்பது பற்றி இங்கே காண்போம்.

1) சேவைக் கட்டணம் பொதுவாக இருக்கக்கூடிய ஒன்று, இலவச பயன்பாட்டு வரம்பிற்கு மேல் வாடிக்கையாளர்கள் அதைப் பயன்படுத்தும் போது மட்டுமே சேவை கட்டணம் விதிக்கப்படும். உதாரணமாக ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பதற்கான அதிகபட்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2) வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகை வங்கியால் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட குறைவாக இருக்கும்பொழுது வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் அபராதம் விதிக்கிறது.

3) டெபிட் கார்டு வைத்திருப்பவர்களிடம் வங்கி ஆண்டு கட்டணம் வசூலிக்கிறது.

4) காசோலை புத்தகத்தை மீண்டும் வழங்குவதற்கு அல்லது அது காசோலை பவுன்ஸ் ஆகிவிட்டால் வங்கி கட்டணம் வசூலிக்கிறது.

5) பணம் ட்ரான்ஸாக்ஷன் செய்யும்போது வங்கிகள் வாடிக்கையாளர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கிறது.

6) பணத்தை வித்ட்ராவ் செய்வது அல்லது டெபாசிட் செய்வது போன்றவற்றிற்கு பணமதிப்பின் அடிப்படியில் வங்கிகள் கட்டணம் வசூலிக்கிறது.

7) கேஷ் டெலிவரி போன்ற ஹோம் பேங்கிங் சேவைகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

8) வங்கியில் நீங்கள் ஏதேனும் கடனுக்கு விண்ணப்பித்தால் அதற்கு நீங்கள் ப்ராசஸிங் கட்டணம், டாக்குமெண்டேஷன் கட்டணங்கள், விண்ணப்பக் கட்டணம் மற்றும் சட்டக் கட்டணங்கள் ஆகியவற்றைச் செலுத்த வேண்டியிருக்கும்.

9) கடனுக்கு விண்ணப்பிக்கும்போது நீங்கள் சில ஆவணங்களை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும், சில சமயம் அவற்றின் நகலுக்கு நீங்கள் விண்ணப்பிக்கும்போது வங்கி உங்களிடம் கட்டணம் வசூலிக்கிறது.

10) நிலையான வட்டி விகிதத்தில் உங்களுக்கு கடன் வாங்கப்பட்டால், அதை முன்கூட்டியே மூடுவதற்கு நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

11) லாக்கர் வசதியை பயன்படுத்திக்கொள்ள வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட வங்கிக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

12) உங்கள் டெபிட் கார்டு மூலம் நாட்டிற்கு வெளியே அதாவது வெளிநாட்டில் பணம் செலுத்துவதற்கும் நீங்கள் வங்கிக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

13) டிமாண்ட் டிராஃப்ட் தயாரிக்கும் செயல்முறைக்கு வங்கிக்கு நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.

14) அதிக பக்கங்களுடன் கூடிய காசோலை புத்தகத்தைப் பெற நீங்கள் வங்கிக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

Exit mobile version