Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள்  வேலை நிறுத்தம்! நிர்வாகமே இதற்கு பொறுப்பு!

Bank employees strike across the country! Management is responsible for this!

Bank employees strike across the country! Management is responsible for this!

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள்  வேலை நிறுத்தம்! நிர்வாகமே இதற்கு பொறுப்பு!

நேற்று அகில இந்திய வங்கி பணியாளர்கள் சம்மேளனம் சார்பில் தேவிதாஸ் துல்ஜபுர்கார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அந்த அறிவிப்பில் வங்கி ஊழியர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் வங்கி நிர்வாகங்கள் தானாகவே முடிவுகளை எடுகின்றனர் ஊழியர்களிடம் அதனை பற்றி பேசவோ அல்லது கலந்து முடிவு எடுக்கும் வழக்கத்தை கைவிட்டு விட்டனர்.

மேலும் இருதரப்பு தீர்வு தொடர்பான அனைத்து விதிமுறைகளையும் மீறி வருகின்றனர்.மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை பிறப்பிக்கும் உத்தரவுகளை வங்கி நிர்வாகங்கள் ஒருபொழுதும் கடைபிடிப்பது இல்லை.மேலும் வங்கி நிர்வாக பணியாளர் உறவை அலட்சியமாக நினைகின்றனர்.

பேங்க் ஆப் மகாராஷ்டிரா ,பேங்க் ஆப் பரோடா ,பேங்க் ஆப் இந்தியா ,பெடரல் வங்கி சோனாலி வங்கி ,கத்தோலிக் சிரியன் வங்கி ,கனரா வங்கி ஆகிய வங்கிகளின் நிர்வாகங்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் வங்கி ஊழியர்களிடையே பரவலான கலக்கம் ஏற்பட்டுள்ளது.

அதனால் அனைத்து வங்கிகளிலும் உள்ள அகில இந்திய வங்கி பணியாளர் சம்மேளனத்தின் உறுப்பினர்கள் வருகிற 19 ஆம் தேதி அன்று ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version