Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆகஸ்ட் 20 அன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்! காரணம்?

சென்னை: அனைத்து வங்கி கிளைகளில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் (100%) பணிக்கு வர வேண்டும் என்ற மாநில அளவிலான வங்கியாளர்கள் கூட்டமைப்பால் போடப்பட்ட உத்தரவை எதிர்த்து, வரும் 20ஆம் தேதி அன்று வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக, தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலர் இ.அருணாச்சலம் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில் தமிழகத்தில், வரும் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொது போக்குவரத்திற்கும் அனுமதி இல்லை. ஆனாலும், 100 சதவீத ஊழியர்களுடன், வங்கிகள் வழக்கமான சேவையில் ஈடுபடும் என, தமிழக வங்கியாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு வங்கியான, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, செயல்பாட்டு வழிமுறையை வெளியிட்டுள்ளது.

தற்போது, வங்கி வழக்கம்போல் செயல்படுவதால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் கொரோனா தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சிலர் தொற்று காரணத்தால் இறந்தும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கிகள், 100 சதவீத ஊழியர்களுடன், வழக்கம் போல செயல்பட்டால், ஊழியர்களுக்கும் மக்களுக்கும்  தொற்று அதிகம் பரவ வாய்ப்பு உள்ளது. இதனையடுத்து, வங்கி வணிக நேரத்தை காலை, 11:00 முதல், பகல், 2:00 மணி வரை என, குறைக்க வேண்டும். 50 சதவீத ஊழியர்கள் மட்டும் பணிக்கு வர அனுமதிக்க வேண்டும். ஊரடங்கு அமலில் இருக்கும் போது, அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை அளிக்க வேண்டும். வங்கி ஊழியர்களுக்காக, சிறப்பு பேருந்துபேருந்து போக்குவரத்து சேவையை ஏற்படுத்தித் தர வேண்டும். இந்த, 10 கோரிக்கைகளை வலியுறுத்தி வரும், 20ஆம் தேதி, தமிழகம் முழுதும் வங்கிகளின் வேலை நிறுத்தம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

Exit mobile version