மாஸ்க் போடுங்க! துப்பாக்கியால் சுட்ட கொடூரம்! உத்திரபிரதேசத்தில் பரபரப்பு!

0
107

வங்கிக்கு வந்த ஒருவரை மாஸ்க் அணியவில்லை என துப்பாக்கியால் சுட்ட சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப் பிரதேசம் மாநிலம் பரோலி மாவட்டத்தில் பேங்க் ஆப் பரோடா என்ற வங்கி கிளை உள்ளது. அந்த வங்கியின் வாடிக்கையாளர் ஒருவர் ரயில்வே ஊழியர் ராஜேஷ்குமார். அவர் முக கவசம் அணியாமல் வந்துள்ளார். அப்பொழுது வங்கி நுழைவு வாயிலில் நின்றிருந்த காவலாளி கேஷவ் மித்ரா முக கவசம் அணியாமல் உள்ளே செல்லக்கூடாது என்று எச்சரித்துள்ளார்.

இதனால் இருவருக்கிடையே மிகவும் வாக்குவாதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. வாக்குவாதம் தீவிரமடைந்ததால் ஆத்திரமடைந்த காவலாளி ராஜேஷ்குமாரின் காலில் சுட்டுள்ளார். ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த துடித்தார். தனது கணவரை பார்த்து மனைவி கூச்சலிட்ட கதறிய சம்பவம் அங்கு அனைவரையும் கண்ணீர் வரவழைக்க வைக்கிறது.

சம்பவ இடத்தை ஒருவர் வீடியோ எடுத்து இணையதளத்தில் பதிவிட அது வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த போலீசார் ராஜ்குமாரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த காவலாளி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து ராஜேஷ் குமாரின் உறவினர்கள் கூறுகையில், வங்கியில் நுழைய முயன்ற பொழுது காவலர் முகக்கவசம் அணியாததற்கு தடுத்து நிறுத்தினார். பின்னர் அவர் திரும்பிச் சென்று முக கவசம் அணிந்து வந்தார். ஆனால் அப்பொழுதும் காவலாளி உள்ளே விடாமல் இது மதிய உணவு இடைவேளை என்பதால் பிறகு வாருங்கள் என்று தடுத்துள்ளார். இதனாலேயே இருவருக்கும் சண்டை வந்து உள்ளது. அதனால் அவர் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு விட்டார் என கூறினார்.

மேலும் வங்கியில் இருந்த ஊழியர்களிடம் போலீஸ் விசாரணை நடத்தினர். முகக்கவசம் அணியாததால் தான் சுட்டாரா? இல்லை வேறு காரணங்கள் உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.