இன்று முதல் 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை!!RBI அறிவிப்பு!!

0
172
Bank holiday for 5 days from today!!RBI notification!!

கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டும் வருகிற புத்தாண்டை கொண்டாடும் விதத்திலும் இன்று முதல் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் 5 நாட்கள் வங்கிகள் செயல்படாது என்று ஆர்பிஐ தெரிவித்திருக்கிறது.

2024 ஆம் ஆண்டிற்கான ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியலில் குறிப்பிட்டபடி டிசம்பர் 24ஆம் தேதி முதல் டிசம்பர் 29ஆம் தேதி வரை அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

எந்தெந்த ஊர்களில் எந்தெந்த வங்கிகள் விடுமுறை என்ற பட்டியலையும் ஆர்பிஐ வெளியிட்டு இருக்கிறது. அதன்படி,

டிசம்பர் 24 :-

கிறிஸ்துமஸ் ஈவ் முன்னிட்டு கோஹிமா, ஐஸ்வால் ஆகிய இடங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது.

டிசம்பர் 25 :-

கிறிஸ்துமஸ் பண்டிகையின் கொண்டாட்ட நாள் என்பதால் அனைத்து மாநிலங்களிலும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

டிசம்பர் 26 :-

ஒரு சில மாநிலங்களில் மட்டும் 26-ஆம் தேதி அன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக ஐஸ்வால், கோஹிமா மற்றும் ஷில்லாங் போன்ற பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

டிசம்பர் 27 :-

கிறிஸ்மஸ் பண்டிகை நடைபெறுவதை முன்னிட்டு அடுத்த மாநிலங்களில் உள்ள பகுதிகளுக்கு விடுமுறை தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 28 :- மாதத்தின் உடைய நான்காவது சனிக்கிழமை என்பதால் விடுமுறை நாளாக அனுசரிக்கப்படுகிறது.

டிசம்பர் 29 :-

ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் எப்பொழுதும் போல் விடுமுறை நாளாகவே கருதப்படுகிறது.

இந்த 5 நாட்களில் படம் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றால் அதனை ஆன்லைன் மூலமே செய்து கொள்ளலாம் என்றும், நகை அடமானம் வைத்தல் மற்றும் மீட்டல் போன்ற விஷயங்களை இந்த தினங்களில் செய்ய முடியாது என்றும் ஆர்பிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், வங்கிகளுக்கு செல்ல விரும்புபவர்கள் வங்கிகளினுடைய விடுமுறை நாட்களை தெரிந்து கொள்வது மிக முக்கியமான விஷயமாக உள்ளது.