வங்கிகளுக்கு தொடர்சியாக 4 நாட்கள் விடுமுறை? – இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு

0
127
bank holidays 2022

வங்கிகளுக்கு தொடர்சியாக 4 நாட்கள் விடுமுறை? – இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு

நாடு முழுவதும் செயல்பட்டு வரும் வங்கிகளுக்கான விடுமுறை குறித்த அறிவிப்பை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதில் தீபாவளி தினம் முதல் தொடர்சியாக 4 நாட்கள் வங்கிகள் மூடப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி விடுமுறை:

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) விடுமுறை நாட்களை முன்னதாக அறிவித்து வருகிறது. இதில் பொதுவாக வரும் தேசிய விடுமுறைகளை தவிர மற்ற விடுமுறைகள் அனைத்தும் ஒவ்வொரு  மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும். இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி சார்ந்த பணிகளை முறையாக திட்டமிடுவதற்கு முன்னதாக  தங்கள் மாநில வங்கி வேலை நாட்களை குறித்து அறிந்து கொள்வது அவசியமானதாக கருதபடுகிறது.

அந்த வகையில் அக்டோபர் 24 ஆம் தேதியான நேற்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்த வாரத்தில் மட்டுமே நான்கு நாட்கள் வங்கி விடுமுறைகளாக வருகிறது. இதற்கான பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விடுமுறை பட்டியல்:

அக்டோபர் 24 : நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை காரணமாக வங்கிகள் விடுமுறை. இருப்பினும், காங்டாக் மற்றும் இம்பாலில் வங்கிகள் செயல்படுகின்றன.

அக்டோபர் 25 : காங்டாக், இம்பால் மற்றும் ஜெய்ப்பூர் பிராந்திய அலுவலகங்களின் கீழ் வரும் வங்கிக அக்டோபர் 25ஆம் தேதி மூடப்பட்டிருக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மற்ற பிராந்திய அலுவலகங்களின் கீழ் வரும் வங்கிக் கிளைகள் இந்த தேதியில் திறந்திருக்கும்.

அக்டோபர் 26: அகமதாபாத், பேலாப்பூர், பெங்களூரு, டேராடூன், காங்டாக், ஜம்மு, கான்பூர், லக்னோ, மும்பை, நாக்பூர், சிம்லா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய வங்கிக் கிளைகள் இந்த தேதியில் மூடப்பட்டிருக்கும்.

அக்டோபர் 27: காங்டாக், இம்பால், கான்பூர் மற்றும் லக்னோவின் கீழ் வரும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.