பேங்க் லாக்கர் செம்ம ஸ்ட்ராங்!!! வங்கிக்கு பாராட்டு கடிதம் எழுதிய கொள்ளையன்!!!

0
104

பேங்க் லாக்கர் செம்ம ஸ்ட்ராங்!!! வங்கிக்கு பாராட்டு கடிதம் எழுதிய கொள்ளையன்!!!

பேங்க் லாக்கர் நன்கு பலமாக உள்ளது என்று வங்கிக்கு கொள்ளையன் ஒருவன் பாட்டுக் கடிதம் எழுதிய சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் நடந்துள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் நென்னல் நகரப் பகுதியில் கிராமப்புற வங்கியின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. இந்த வங்கியானது தனியாக இருக்கும் வாடகை வீட்டில் இயங்கி வருகின்றது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அதாவது செப்டம்பர் 1ம் தேதி கிராமப்புற தலைமை வங்கியின் முன்பக்க கதவை உடைத்து முகமூடி அணிந்த கொள்ளையன் ஒருவன் வங்கிக்குள் நுழைந்துள்ளான். வங்கியில் நுழைந்த அந்த முகமூடி அணிந்த கொள்ளையன் லாக்கர் இருக்கும் இடத்திற்கு சென்று லாக்கரை திறக்க முயற்சி செய்து முடியாமல் போக லாக்கரை உடைக்க முயன்றுள்ளான்.

ஆனால் அந்த திருடனால் லாக்கரை உடைக்கவும் முடியவில்லை. உடைக்க முயன்று ஏமாற்றம் அடைந்த முகமூடி கொள்ளையன் நகை பணம் எதாவது இருக்கின்றதா என்று வங்கி புழுவதும் தேடி பார்த்தான். ஆனால் எதுவும் கிடைக்காததால் விரக்தி அடைந்த திருடன் கஷ்டப்பட்டு கதவை உடைத்து உள்ளே வந்தும் எதுவும் கிடைக்காததால் வருத்தம் அடைந்தான்.

பின்னர் வங்கியில் இருந்து ஒரு பேப்பரை எடுத்து ஸ்கெட் பேனா மூலமாக “இந்த வங்கியில் எனக்கு ஒரு ரூபாய் கூட கிடைக்க வில்லை. இந்த வங்கியின் லாக்கரை உடைக்க முயற்சி செய்தேன். ஆனால் மிக ஸ்ட்ராங்காக இருக்கின்றது. இது ஒரு நல்ல வங்கி. என்னை தேட வேண்டாம். என்னுடைய கை ரேகை எதுவும் இங்கு பதிவு ஆகி இருக்காது” என்று பாராட்டு கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார்.

நேற்று(செப்டம்பர்2) காலை வங்கியை திறக்க வந்த அதிகாரிகள் வங்கியின் முன்பக்க கதவு திறந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து வங்கியின் உள்ளே சென்று லாக்கரை பார்த்தனர். லாக்கர் உடைக்கப்படாமல் அப்படியே இருந்ததால் அதிகாரிகள் நிம்மதி  அடைந்தனர்.

பின்னர் முகமூடி கொள்ளையன் எழுதி வைத்திருந்த கடிதம் வங்கி அதிகாரிகளுக்கு கிடைத்தது. இதை படித்து பார்த்த வங்கி அதிகாரிகள் காவல் துறையினருக்கு புகார் அளித்துள்ளனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிசிடிவியில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து கொள்ளையனை தேடி வருகின்றனர்.