நாளை முதல் புதிய யுபிஐ விதிகள் அமலுக்கு வருகின்றன. அவற்றின் படி ஒவ்வொரு மாதமும் 14 நாட்கள் உங்களுடைய அக்கவுண்டில் இருக்கக்கூடிய பணமானது பிளாக் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இது உங்களுடைய நன்மைக்கான ஒரு செயல் என்று ஆர்பிஐ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதாவது, இந்த புதிய விதிகளின்படி பயனர்களுடைய அனுமதியின் பெயரில் ஒவ்வொரு மாதமும் 14 நாட்கள் அக்கவுண்டில் இருக்கக்கூடிய பணமானது பிளாக் செய்யப்படும் என்றும் 14 நாட்கள் முடிவடைந்த பின்னர் அவர்களுடைய பணம் மீண்டும் வங்கி கணக்கிற்கு வந்து சேர்ந்து விடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது
பலர் தங்களுடைய இன்ஷூரன்ஸ் மற்றும் இஎம்ஐ போன்ற தொகைகளை செலுத்துவதற்கு வங்கி கணக்கில் பணத்தினை சேர்த்து வைக்கும் பொழுது அவை வேறொரு காரணங்களுக்காக எடுத்து சில நேரங்களில் செலவு செய்யப்பட்டு விடுகிறது. இவ்வாறு நடைபெறும் செயலானது பயனர்களை பண நெருக்கடியில் கொண்டு விடுவதால் இதற்கு தீர்வு காணும் வகையில் இன்ஷூரன்ஸ் மற்றும் இஎம் ஐ போன்ற பணங்களை செலுத்துவதற்காக அக்கவுண்டில் நாம் போடக்கூடிய பணம் வங்கி பயனரின் உடைய அனுமதியின் பெயரில் 14 நாட்களுக்கு பிளாக் செய்யப்படும் என்றும் இன்சூரன்ஸ் அல்லது இஎம்ஐ கட்டக்கூடிய நிறுவனங்கள் அந்த 14 நாட்களுக்குள் பணத்தை எடுத்துக் கொண்டால் வங்கி பயணருடைய கணக்கிலிருந்து இன்சூரன்ஸ் கம்பெனியின் உடைய வங்கி கணக்கிற்கு பணமானது மாற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஒருவேளை அந்த 14 நாட்களில் இன்ஷூரன்ஸ் நிறுவனம் தன்னுடைய பணத்தை அதாவது பயனருடைய பணத்தைப் பெற்றுக் கொள்ளவில்லை என்றால் அந்த பணம் மீண்டும் பயனருடைய வங்கி கணக்கிற்கு வந்து சேர்ந்து விடும் என இந்த புதிய யுபிஐ வெளியானது தெரிவிக்கிறது. இந்த விதியின் மூலம் பயனர்கள் எந்தவித சிரமமும் இன்றி தங்களுடைய மாதாந்திர இன்சூரன்ஸ் மற்றும் கடன் தொகை போன்றவற்றைசெலுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.