Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பேங்க் ஆஃப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு!! மொத்தம் 592 காலிப்பணியிடங்கள்!!

Bank of Baroda Bank Jobs!! Total 592 Vacancies!!

Bank of Baroda Bank Jobs!! Total 592 Vacancies!!

நம் நாட்டில் செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

அதன்படி சிறப்பு அதிகாரி பணிக்கு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.பணி குறித்த விரிவான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

வேலை வகை: வங்கி வேலை

நிறுவனம்: பேங்க் ஆஃப் பரோடா வங்கி

பணியின் பெயர்:

*சிறப்பு அதிகாரி

காலிப்பணியிடங்கள்:

சிறப்பு அதிகாரி பணிக்கென மொத்தம் 592 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் ஏதேனும் ஒரு துறையில் டிகிரி முடித்திருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வயது தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க உள்ள நபர்களுக்கு அதிகபட்ச வயது தகுதி 50 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

மாத ஊதியம்:

இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.40,000 வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தேர்வு செய்யப்படும் முறை:

1)நேர்முகத் தேர்வு
2)சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://www.bankofbaroda.in/ என்ற அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு உரிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

விண்ணப்பிக்க இறுதி நாள்: 19-11-2024

Exit mobile version