துப்பாக்கி முனையில் வங்கியில் கொள்ளை!! காவல்துறை மக்களிடம் வைத்த வேண்டுகோள்!!
கடந்த டிசம்பர் 29ஆம் தேதி உத்தரப்பிரதேசத்தில் உள்ள யூனியன் வங்கியில் துப்பாக்கி முனையில் வங்கி ஊழியரை மிரட்டி பணம் கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.தற்போது அதன் சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் வெளியீட்டு சில வேண்டுகோளையும் முன் வைத்துள்ளனர்.
உத்திரபிரதேசம் மாநிலம் ஜான்பூர், ஜலால்பூர் மாடியாஹூன் சாலையில் அமைந்துள்ள யூனியன் வங்கியில் வாடிக்கையாளர் சேவை மையத்திற்குள் முகமூடி அணிந்த இரண்டு நபர்கள் நுழைந்தனர்.
அவர்கள் பணியில் இருந்த ஊழியர் யிடம் துப்பாக்கியை காட்டி 48,800 ரூபாயை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.இச்சம்பவம் நடந்து நான்கு நாட்கள் ஆகியும் கொள்ளையர்களை பிடிக்க முடியாததனால் தற்போது காவல்துறை அதிகாரிகள் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ளனர்.
அந்த சிசிடிவி கட்சியில் துப்பாக்கி முனையில் வங்கி ஊழியரை மிரட்டி பணம் கேட்ட பொழுது,வங்கி ஊழியர் முகமூடி அணிந்த நபரின் காலில் விழுந்து கொள்ளையடிக்க வேண்டாம் என்று கெஞ்சியுள்ளார்.ஆனால் 48800 ரூபாயை மட்டும் கொள்ளையடித்துக் கொண்டு, வெளியே இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து காத்துக் கொண்டிருந்த மற்றொரு நபரின் வண்டியில் தப்பித்து செல்கிறார்.
இந்த காட்சிகளை வெளியிட்டுள்ள காவல் துறை அதிகாரிகள் குற்றவாளிகளை அடையாளம் கண்டுபிடித்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கும்படியும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.