தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பரவ காரணமாக ஊரடங்கில் ஒரு சில தளர்வுகள் உடன் வருகின்ற 15ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு நேற்றைய தினம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது இந்த சூழ்நிலையில் வங்கி பரிவர்த்தனைகள் முன்னரே அறிவித்தது போல பகல் 2 மணி வரையில் மட்டுமே நடைபெறும் எனவும், வங்கி வேலை நேரத்தையும் வருகின்ற 13ஆம் தேதி வரையில் குறைத்து தமிழ்நாடு வங்கியாளர்கள் குழுமம் அறிவித்து இருக்கிறது.
அதன்படி வங்கியின் கிளைகள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும். வங்கி பரிவர்த்தனைகள் முன்னரே அறிவித்தது போல பகல் 2 மணி வரை மட்டுமே நடைபெறும் என்றும், மண்டல அலுவலகங்கள் நிர்வாக அலுவலகங்கள் போன்றவைகள் வழக்கம்போல மாலை 5 மணிவரையில் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கிளைகளில் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள் மாற்று முறையில் செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ரொக்க பரிவர்த்தனை மற்றும் இணையதள பரிவர்த்தனைகளுக்கு என் இ எஃப் டி என்ற தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் மற்றும் ஐ எம் பி எஸ் என்ற உடனடி கட்டண சேவை அதோடு ஆர்டிஜிஎஸ் என்ற ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு பணம் செலுத்தும் சேவை அதோடு மொத்த தொகை செலுத்துதல் போன்ற சேவைகளும் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
a
அரசு வர்த்தகம் காசோலை பரிவர்த்தனை சேவைகள் அளிக்கவேண்டும் ஏடிஎம் பணம் செலுத்துதல் இயந்திரம் போன்றவை செயல்படுவதை வங்கிக் கிளைகள் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தகவல்கள் தமிழ்நாடு வங்கியாளர்கள் குழுமம் அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பிய கடிதத்தில் இருந்து பெறப்பட்டதாகும்.