திவாலான கோ ஃபர்ஸ்ட் நிறுவனம்! 5000 ஊழியர்களின் நிலைமை கேள்விக்குறி.?
இந்தியாவில் முக்கியமான நிறுவனமாக உள்ள கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் திவால் ஆனதாக அறிவித்துள்ளது. இதனால் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வரும் 5000 ஊழியர்களின் நிலைமை கேள்விக்குறி ஆக மாறியுள்ளது.
இந்தியாவின் பழமையான நிறுவனமாக இருப்பது வாடியா குழுமம். வாடியா குழுமம் தனது கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தை மொத்தமாக விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடும் நிதி நெருக்கடி காரணமாகதான் வாடியா குழுமம் இந்த முடிவை எடுத்துள்ளது.
வாடியா குழுமம் இந்தியாவில் தனது விமான சேவை நிறுவனமான கோ ஃபர்ஸ்ட்(Go First) நிறுவனத்தை விற்பனை செய்யவுள்ளது. கடும் நிதி நெருக்கடி காரணமாக தேசிய சட்ட நிதி தீர்ப்பாயத்தில் தானாக முன்வந்து திவால் ஆனதாக அறிவித்துள்ளது.
இதன் காரணமாக கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தில் தற்போது வேலை செய்து வரும் 5000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தங்களின் நிலைமை என்ன ஆகும் என்று தெரியாமல் அனைவரும் சோகத்தில் உள்ளனர்.