ஏடிஎம்களில் இனி ஒரு முறைக்கு மேல் பணம் எடுக்க 6 மணி நேரமாகுமா? திருட்டை தடுக்க வங்கிகளின் புதிய திட்டம்

0
166

ஏடிஎம்களில் இனி ஒரு முறைக்கு மேல் பணம் எடுக்க 6 மணி நேரமாகுமா? திருட்டை தடுக்க வங்கிகளின் புதிய திட்டம்

நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் அதே சூழலில் அதை வைத்து நடைபெரும் குற்றங்களும் அதிகரித்து கொண்டே தான் வருகின்றது. கடந்த ஆட்சியில் செயல்படுத்த பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையை தொடர்ந்து மக்கள் வங்கிகளில் பணம் போடுவதும் அதை எடுக்க ஏடிஎம் மற்றும் இணையதளங்களை பயன்படுத்துவதும் அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்நிலையில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை தவறான வழியில் பயன்படுத்தி ஏடிஎம் மற்றும் இணையதளங்கள் மூலமாக மற்றவர்களின் பணத்தை திருடுவது அதிகரித்து கொண்டே வருகிறது. இதை போன்ற இணையதள திருட்டுக்களை குறைக்க காவல் துறையினரும், வங்கிகளும் பல்வேறு ஆலோசனைகள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை செய்தும் அதனால் பெரிதும் பயன் ஏற்படவில்லை.

இதனையடுத்து இனி எடிஎம்களில் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுப்பதாக இருந்தால் அதற்கு ஒடிபி அவசியம் என்ற புதிய திட்டத்தை கொண்டு வர பெரும்பாலான வங்கிகள் பரிலீசித்து வருகின்றன. ஏற்கனவே இந்த திட்டத்தை கனரா வங்கி செயல்படுத்த தொடங்கிவிட்டது.இதனால் இணையதள திருட்டு பெருமளவு குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இனி இதுபோல ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் ஏடிஎம்களில் பணம் எடுக்க கட்டாயம் உங்கள் மொபைல் போன் தேவைப்படும். இதன் மூலம் உங்கள் செல்போன் எண்ணிற்கு அனுப்பபடும் அந்த ஒடிபி எண் இருந்தால் மட்டுமே ஏடிஎம்களில் பணம் எடுக்க முடியும் என்ற நிலையும் வர வாய்ப்பு உள்ளது.

அதிகரித்து வரும் ஏடிஎம் கார்டு மோசடிகளை தடுக்க பெரும்பாலான வங்கிகள் இது போன்ற புதிய பாதுகாப்பு திட்டங்களை முன்னெடுக்க உள்ளன.

கனரா வங்கியின் பாதுகாப்பு திட்டம்

இது போன்ற ஆன்லைன் திருட்டை தடுக்க ஏற்கனவே கனரா வங்கி ரூ.10 ஆயிரத்துக்கு மேல் ஏடிஎம்களில் பணம் எடுக்கும் போது ஒடிபி அவசியம் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கனரா வங்கி செயல்படுத்திய இந்த பாதுகாப்பு திட்டத்தை மற்ற அனைத்து வங்கிகளும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவது பற்றியும் பரிலீசித்து வருகின்றன.

மொபைல் ஆப்களின் எழுச்சி

இனி வரும் காலங்களில் எடிஎம்களின் பயன்பாட்டை குறைத்து மொபைல் ஆப் மூலம் பண பரிவர்த்தனை செய்வதை ஊக்குவிக்கவும் சில வங்கிகள் திட்டமிட்டுள்ளது. இது குறித்து கடந்த சில நாள்களுக்கு முன்பு பாரத ஸ்டேட் வங்கி சேர்மன் ரஜ்னீஸ் குமார் பேசும் போது, நீண்ட காலமாக நடக்கும் ஏடிஎம்களை அடிப்படையாக கொண்ட பணப் பரிவர்த்தனைகளை முடிவுக்கு கொண்டு வந்து, மொபைல் ஆப் மூலம் பண பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க ஆலோசித்து வருகிறோம் என்றும் கூறியிருக்கிறார்.

ஏடிஎம்களில் பணம் எடுக்க புதிய கட்டுப்பாடு

இந்நிலையில் வங்கி ஏடிஎம்களில் நடக்கும் இது போன்ற மோசடிகளை தடுப்பது குறித்த வங்கிகளின் பிரதிநிதிகள் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் ஏடிஎம்களில் நள்ளிரவில் குறிப்பிட்ட நேரத்திற்கு பணம் எடுப்பதற்கு தடை விதிக்கலாமா என்றும் பரிசீலிக்கப்பட்டிருக்கிறது

பணம் எடுக்க இடைவெளி

மேலும் இது மட்டுமில்லாமல் ஒரு முறை பணம் எடுத்தால் அடுத்த முறை பணம் எடுப்பதற்கு குறைந்த பட்சம் 6 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கலாமா என்றும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதே போல் ஏடிஎம்களில் பணம் எடுத்தால் ஒடிபி அவசியம் என்ற திட்டத்தை கொண்டுவருவது குறித்தும் பரிலீசிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள சூழ்நிலையில் விடுமுறை நாட்களில் பெரும்பாலான எடிஎம்களில் முறையாக பணமே வைத்திருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் பரவலாக எழுந்து வருகிறது.இந்நிலையில் வங்கிகள் தொழில்நுட்பத்தின் மூலம் பாதுகாப்பை மேம்படுத்த முயற்சிக்காமல் 6 மணி முதல் 12 மணி நேரம் வரை பணம் எடுக்க காத்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்க முயற்சிப்பது மக்களை மேலும் சிரமத்திற்கு உள்ளாக்கும் என்பது தெளிவாகிறது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்