இந்த ஆறு நாட்களில் வங்கிகள் செயல்படாது! ரிசர்வ் பேங்க் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

0
162
Banks will not operate in these six days! Sudden announcement by the Reserve Bank!

இந்த ஆறு நாட்களில் வங்கிகள் செயல்படாது! ரிசர்வ் பேங்க் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

கொரோனா தொற்றானது முதல் அலை ஆரம்பித்து தற்போது இரண்டாவது அலையில் முடிந்துள்ளது.இந்த இரண்டாம் அலையில் இந்தியா பெருமளவு இழப்புகளை சந்தித்தது.தற்போது தான் அந்த இழப்புகளிலிருந்து இந்தியா மீண்டு வருகிறது.கொரோனா தொற்று அதிகமாக காணப்பட்டதால் அரசாங்கம் முழு ஊரடங்கை அமல்படுத்தியது.அப்பொழுது வங்கிகள் உட்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டது.கொரோனா தொற்று குறைந்த பகுதிகளில் அரசாங்கம் சில தளர்வுகளை அமல்படுத்தினர்.அப்பொழுது தொற்று குறைந்த பகுதிகளில் வங்கிகள் நேரக் கட்டுப்பாட்டுடன் செயல்பட்டது.

தற்போது தமிழ்நாடு முழுவதும் அனைத்து தளர்வுகளையும் தகற்றி விட்ட நிலையில் மக்கள் அன்றாட வாழ்க்கையை வாழ ஆரம்பித்துவிட்டனர்.ஓர் மாதகாலம் முடிந்து மீண்டும் தமிழகம் பழைய நிலைக்கு திரும்ப முயல்கிறது.இந்த நிலையில் வங்கியில் ஓர் வாரம் விடுமறை அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.தற்போதைய ஜுலை மாதத்தில் மட்டும் வங்கிகளுக்கு 15 நாட்களுக்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.இந்த 15 நாட்களில் 9 நாட்களுக்கு பண்டிகைகளுக்காக மட்டும் விடுமறை அளித்துள்ளனர்.

இந்த விடுமுறையானது ஒவ்வொரு மாநிலத்தின் பண்டிகைக்கு ஏற்றவாறு மாறுபடும்.இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.அதுமட்டுமின்றி எந்தெந்த நாட்களில் பண்டிகைகள் மற்றும் விடுமுறை என்ற பட்டியலையும் ரிசர்வ் வங்கி அளித்துள்ளது.இந்த பட்டியலானது அந்தந்த மாநிலத்திற்கு சம்பந்தப்பட்ட அனைத்து வங்கிகளுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் உங்களுக்கு வங்கி சம்பந்தம் பட்ட வேலைகள் ஏதேனும் இருக்குமாயின் முன் கூட்டியே அதனை முடித்து கொள்ளுங்கள்.மேற்கண்ட தகவல்களை பெற நீங்கள் உங்கள் வங்கியை அனுகலாம்.அதுமட்டுமின்றி இந்த விடுமுறை நாளானது பண்டிகைகளுக்கு ஏற்றவாறும் மற்றும் மாநிலங்களுக்கு ஏற்றவாறும் மாறுபடுகிறது.இதனை அறிந்துக்கொள்ள மக்கள் வங்கிகளுக்கு நேரடியாக செல்ல முடியவில்லை என்றால் விடுமுறை நாட்கள் பற்றி அந்த வங்கியின் இணையத்திலும் கண்டறியலாம்.