புதிய கல்வி கொள்கையில் விருப்ப மொழி பட்டியலில் இருந்து தற்போது சீன மொழி நீக்கப்பட்டுள்ளது.
இந்தியா – சீனா இடையே எல்லைப்பகுதியில் நடைபெற்ற மோதலுக்குப் பிறகு இந்தியாவில் சீன நிறுவனங்கள் மற்றும் அவற்றுக்குச் சொந்தமான செயலிகளை தடைசெய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது அதனையெடுத்து நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் இருக்கும் டிக்டாக் செயலி உள்ளிட்ட சீனாவின் 59 செல்போன் செயலிகளுக்கு தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 59-வது பிரிவின் கீழ் மத்திய அரசு தடைவிதித்தது.
இந்நிலையில் தற்போது வந்துள்ள புதிய கல்விக் கொள்கையில் விருப்ப மொழி பட்டியலிருந்து சீன மொழியான மாண்டரின் நீக்கப்பட்டுள்ளது.இனி இந்தியாவில் உள்ள எந்தவொரு பள்ளிப் பாடத்திலும் இந்த மொழியை கற்க இயலாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.