உங்களில் பலர் அறிந்திராத கீரை வகைகளில் ஒன்று தான் பன்னிமொட்டான் கீரை.இது நீர் நிலைகளுக்கு அருகில் பரவலாக வளரக் கூடியவை.அதேபோல் மழை காலங்களில் வயல் ஓரங்களிலும் இந்த கீரை பரவலாக காணப்படும்.இந்த கீரையில் ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகள் அடங்கியிருக்கிறது.மூல நோய் உள்ளவர்கள் இந்த கீரை மற்றும் அதன் தண்டை கசாயம் போல் கொதிக்க வைத்து பருகி வந்தால் நிவாரணம் கிடைக்கும்.
இக்காலத்தில் பைல்ஸ் பாதிப்பை இளம் வயதினர்,வயதானவர்கள் என்று அனைவரும் சந்தித்து வருகின்றனர்.கடும் மலச்சிக்கல்,நார்ச்சத்து குறைபாடு மற்றும் நீர்ச்சத்து குறைபாடு போன்ற காரணங்களால் பைல்ஸ் பாதிப்பு ஏற்படுகிறது.
பைல்ஸ் பாதிப்பை இயற்கையான முறையில் குணப்படுத்தும் முறை:
தேவையான பொருட்கள்:-
1)பன்னிமொட்டான் கீரை – ஒரு கப்
2)பன்னிமொட்டான் கீரை தண்டு – ஒரு கப்
3)கல் உப்பு – சிறிதளவு
4)தண்ணீர் – ஒன்றரை கப்
செய்முறை விளக்கம்:-
**முதலில் பன்னிமொட்டான் கீரை மற்றும் அதன் தண்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
**பிறகு பாத்திரம் ஒன்றை எடுத்து நறுக்கி வைத்துள்ள பன்னிமொட்டான் கீரை மற்றும் தண்டை அதில் போட்டு தண்ணீர் ஊற்றி இரண்டு முதல் மூன்று முறை அலசி சுத்தம் செய்ய வேண்டும்.
**பிறகு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.
**இரண்டு நிமிடங்களுக்கு பிறகு நறுக்கி சுத்தம் செய்து வைத்துள்ள பன்னிமொட்டான் கீரை மற்றும் தண்டை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
**கீரையின் சாறு நீரில் இறங்கி ஒன்றரை கப் தண்ணீர் ஒரு கப்பாக வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
**அதன் பிறகு தங்களுக்கு தேவையான அளவு கல் உப்பை அதில் போட்டு கலக்கி காலை நேரத்தில் வெறும் வயிற்றில் பருக வேண்டும்.
**தேவைப்பட்டால் இந்த பானத்தில் வெந்தயத் தூள்,சீரகத் தூள் சேர்த்து பருகலாம்.மூல நோயால் அவதியடைந்து வருபவர்கள் இந்த பானத்தை தொடர்ந்து பருகி வந்தால் அதன் பாதிப்பில் இருந்து சீக்கிரம் மீண்டுவிட முடியும்.