Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தடை செய்வது தவறு! பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கருத்து!!

#image_title

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தடை செய்வது தவறு! பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கருத்து!
பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தடை விதிப்பது தவறு என்று பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகை அடா ஷர்மா, நடிகை சித்தி இட்னானி, நடிகை யோகிதா பிஹானி, நடிகை சோனியா பலானி நடிப்பில் கடந்த மே 5ம் தேதி தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தை இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கியுள்ளார்.
இந்த திரைப்படத்திற்கு பல அரசியல் தலைவர்களும், பல சமூக அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. இருந்தும் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் பல எதிர்ப்புகளையும் தாண்டி 17 நாட்களில் 200 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இந்த தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு எதிர்ப்புகள் இருந்தாலும் பாஜக கட்சி சார்பில் ஆதரவுகள் இருந்து வருகின்றது. இந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அவர்கள் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
ஜார்கண்ட் மாநிலத்தில் கோயில் ஒன்றுக்கு சென்றுவிட்டு திரும்பும் பொழுதுதான் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
தி கேரளா ஸ்டோரி திரைப்படம் குறித்து நடிகை கங்னா ரனாவத் “அரசாங்கத்தின் ஒரு அங்கமாக இருக்கும் சென்சார் போர்ட் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை அனுமதித்து உள்ளது. இதற்கு பிறகும் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தடை விதிப்பது அரசாங்கத்தின் அரசியலமைப்பு சட்டத்தை அவமதிக்கும் செயலாகும். தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை வெளியிடுவதற்கு சில மாநிலங்கள் தடை விதித்திருப்பது தவறான செயல்” என்று அவர் கூறியுள்ளார்.
Exit mobile version