Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆண், பெண் மலட்டுத்தன்மை போக்கும் ஆலம் பழத்தின் மருத்துவ பயன்கள்..!!

Aalam Palam Benefits in tamil

Aalam Palam Benefits in tamil: பாரம்பரிய மரமாக கருதப்படும் ஆலமரத்தை நாம் தேசிய மரமாக தான் பார்த்து வருகிறோம். இந்த ஆலமரம் பார்ப்பதற்கு கம்பீரமாக படர்ந்து விரிந்து, அதன் விழுதுகள் கிளை மரங்கள் போல் காட்சியளிக்கும். கிராமங்களில் வளர்ந்த 80ஸ், 90ஸ் பிள்ளைகளின் ஊஞ்சல் இந்த ஆலமரத்தின் விழுதுகள் என்றே கூறலாம்.

கிராமங்களில் பள்ளிக்கூடங்களில் இந்த மரங்கள் அதிக அளவில் காணப்படும். பெரும்பாலும் அவர்களுக்கு வகுப்பு இந்த மரத்திற்கு அடியில் தான் நடக்கும். ஆனால் அப்போது எல்லாம் இந்த மரத்தின் மருத்துவ பயன்கள் பற்றி தெரியாமல் இருந்துவிட்டோம். தற்போது ஆலம்பழத்தின் மருத்துவ பயன்கள் பற்றி இந்த பதிவில் (Aalam Palam Benefits in tamil) காண்போம்.

ஆலம்பழத்தின் மருத்துவ பயன்கள்

ஆலமரத் பார்ப்பதற்கு பெரிய மரமாக காணப்பட்டாலும் இதன் பழம் சிவப்பு நிறத்தில் சிறிய பழமாக கொத்து கொத்தாக காணப்படும். இந்த பழங்கள் மரத்தில் காய்த்திருக்கும் போது ஆலமரத்தை பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும். மேலும் இந்த பழங்கள் காய்க்கும் நேரத்தில் மாலை பொழுதில் இந்த மரத்தை சுற்றி ஏரானமான குருவி கூட்டங்கள் சத்தத்துடன் காணப்படும்.

இந்த பழம் சிவப்பு நிறத்தில் காணப்படும். அதனை அழுத்தி பிளந்து பார்த்தால் அத்திப்பழம் போன்று சிறிய சிறிய விதைகள் போன்ற அமைப்பில் பழுப்பு நிறத்தில் காணப்படும். இந்த பழம் துவர்ப்பு சுவையில் இருக்கும்.

இந்த பழத்தை ஆண் பெண் இருபாலரும் சாப்பிடலாம். இந்த ஆலம்பழத்தை சாப்பிட்டால் ஆண், பெண் மலட்டுத்தன்மை போக்குவதாக கூறப்படுகிறது. இந்த பழம் சீசன் பழம் என்பதால் கிடைக்கும் போது பறித்து வந்து நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்து குடித்து வரலாம்.

மேலும் பல் வலி ஏற்படும் போது ஆலம் பூ மொட்டினை பற்களில் கடித்து வாயில் வைத்துக்கொண்டால் சிறிது நேரத்தில் பல் வலி குணமாகும். ஆலங்குச்சி வைத்து பல் துலக்கி வந்தால் பற்கள் உறுதி பெறும்.

ஆலம் பழத்தை பறித்து வந்து நிழலில் உலர்த்தி அதனை அரைத்து பாலுடன் பருகி வந்தால் ஞாபக மறதி நீங்கும்.

மேலும் ஆலம்பழத்தை சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக உள்ளது.

ஆலம் பழத்தை பறித்து வந்து நிழலில் உலர்த்தி அதனை அரைத்து பாலுடன் பருகி வந்தால் ஞாபக மறதி நீங்கும். நரம்பு தளர்ச்சி ஏற்படாது.

குறிப்பு: ஒரு சில பழங்களை பிளந்து பார்த்தால் புழுக்கள் இருக்கும். எனவே இதனை உண்ணும் போது பார்த்து சாப்பிட வேண்டும்.

மேலும் படிக்க: இந்த பழத்தை எங்கு பார்த்தாலும் விடாதீங்க..!! மலச்சிக்கல் முதல் அனைத்து வயிற்று பிரச்சனைக்கும் தீர்வு..!!

Exit mobile version