Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குடலிறக்கம் மற்றும் கர்ப்பப்பை இறக்கத்தை சரி செய்யும் அற்புத மருந்து

குடலிறக்கம் மற்றும் கர்ப்பப்பை இறக்கத்தை சரி செய்யும் அற்புத மருந்து

குடலிறக்கம் என்பது நமது உடலில் உள்ள ஒரு உறுப்பில் உள்ள துவாரத்தின் வழியே அதன் தசைச்சுவரில் ஏற்படும் புடைப்பாகும். இந்த குடலிறக்கம் தொப்புள், அடிவயிறு உள்ளிட்ட இடங்களில் உள்ள தசைப்பகுதிகளில் ஏற்படும். இந்த குடலிறக்கம் பிரச்சினை சிறியவர் முதல் பெரியவர் வரை என யாருக்கு வேண்டுமானாலும் வர வாய்ப்புண்டு.

இந்த ஹெர்னியா என்னும் குடலிறக்கம் ஏற்பட பல காரணங்கள் கூறப்படுகிறது. இந்த குடலிறக்கம் வந்தால் வயிற்றில் புடைத்த நிலையில் கட்டி உண்டாகும்.இதனால் கடுமையான வலியையும் சந்திக்க நேரிடும்.

சில நேரங்களில் வயிற்றில் உண்டாகும் இந்த புடைப்பால் குடலானது நகர முடியாமல் மாட்டிக்கொண்டு குடல் அடைப்பு அல்லது குடலானது அழுகிப்போகும் வாய்ப்பும் உள்ளது.

இத்தகைய ஹெர்னியா பிரச்சனை இருப்பவர்களுக்கு உடல் எடை அதிகரிப்பது, கல்லீரல் நோய், தொடர்ச்சியான இருமல் மற்றும் மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும்.

இந்த குடலிறக்கம் பிரச்சனையை ஓரளவு சரி செய்ய அதிமதுரம்,இஞ்சி மற்றும் மோர் உள்ளிட்ட உணவுகள் பயன்படுகின்றன.

அதே போல பரங்கிக்காய் ஹெர்னியா என்ற இந்த குடலிறக்கம் பிரச்சனையை தீர்க்கும் அரு மருந்தாக பயன்படுகிறது. குடலிறக்கம் மட்டுமில்லாமல் இது கர்ப்பப்பை இறக்கத்தையும் சரி செய்ய வல்லது.

தசையை வலுப்படுத்தினால், குடலிறக்கம், கர்ப்பப்பை இறக்கம் போன்ற பிரச்சினைகளை சரிசெய்யலாம். அதற்கு பரங்கிக்காயை பச்சையாக உண்பது ஆகச் சிறந்த தீர்வாக இருக்கிறது.தொடர்ந்து 10 நாட்கள் இதை பச்சையாக சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து சுலபமாக விடுபடலாம்.

Exit mobile version