Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாரதியிடம் கையும், களவுமாக சிக்கப்போகும் அஞ்சலி!! ஒற்றை ஃபோன் கால், சிக்கித்தவிக்கும் கண்ணம்மா, அஞ்சலி!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபல சீரியல் “பாரதி கண்ணம்மா”. இது பட்டி தொட்டி எங்கும் பார்வையாளர்களை கொண்டுள்ளது.
பாரதியும், கண்ணம்மாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஹேமா மற்றும் லட்சுமி என்ற இரட்டை குழந்தை பிறந்துள்ளது.

அதில் ஒரு குழந்தையை அவரது மாமியார் தூக்கிச் சென்று விட்டார். இன்னொரு குழந்தை கண்ணம்மாவிடம் உள்ளது.
ஹேமாவின் மீது தன் மகளாக பாரதியும், பள்ளியில் சமையல் செய்யும் சமையல் அம்மாவாக கண்ணம்மாவும் அன்பு செலுத்துகின்றனர். இந்நிலையில், அண்மையில் கண்ணம்மாவுக்கு தனக்கு பிறந்தது இரட்டை குழந்தை என்ற உண்மை தெரியவருகிறது.

மேலும், ஹேமா தான் தன்னுடைய மற்றொரு மகள் எனவும், தெரியவருகிறது. இதனால், ஹேமாவை தன்னிடம் ஒப்படைக்குமாறு கண்ணம்மா போராடி வருகிறார். இதற்கு நான்கு நாட்கள் கெடு கேட்டிருக்கிறார் சௌந்தர்யா.

இப்படி இருக்கையில் அஞ்சலி ஹேமாவை கண்ணம்மா வீட்டுக்கு அழைத்து வந்து இரண்டு நாட்கள் தங்க செய்கிறாள். ஆனால் இதுகுறித்து பாரதிக்கு தெரியாது.
இந்த நிலையில் அஞ்சலிக்கு வெண்பா பொய் சொன்னது தெரியவந்துள்ளது.

பாரதி எழுதி கொடுத்ததாக கொடுக்கப்பட்ட மாத்திரை சட்டை பார்த்த கண்ணம்மா அது அவருடைய கையெழுத்து இல்லை என அந்த சீட்டை கிழிக்கிறார். ஹேமா மற்றும் அஞ்சலி இருவரும் மகிழ்ச்சியாக கண்ணம்மாவிடம் இருக்கின்றனர்.
பாரதிக்கு ஹேமாவை பார்க்காமல் இருக்க முடியவில்லை.

அதனால் அஞ்சலி வீட்டிற்கு செல்ல முடிவு செய்கிறார்.
ஆனால் ஹேமா இருப்பது கண்ணம்மா வீட்டில்..
என்ன நடக்கும் என்பதை திங்கள் கிழமை வரை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Exit mobile version