உடலில் அதிகளவு வியர்வை வெளியேறுவதால் அக்குள்,பிறப்புறுப்பு பகுதியில் பாக்டீரியாக்கள் தேங்கி துர்நாற்றம் வீசத் தொடங்குகிறது.இந்த உடல் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த நீங்கள் நிச்சயம் வாசனை திரவியத்தை பயன்படுத்துவீர்கள்.சிலர் காலை,இரவு என இரு நேரங்களிலும் குளித்து உடல் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த முயல்கின்றனர்.
ஆனால் இதுபோன்ற செயல்களால் உடல் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த முடியாது,இதற்கு ஒரு எளிய தீர்வு இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு கைப்பிடி வெட்டி வேரை குளிக்கும் நீரில் போட்டு ஒரு மணி நேரத்திற்கு ஊறவிடவும்.பிறகு இந்த நீரில் குளித்தால் உடலில் வியர்வை நாற்றம் வீசுவது குறையும்.நீரில் நொச்சி இலையை போட்டு குளித்தால் உடலில் வியர்வை நாற்றம் வீசுவது கட்டுப்படும்.
உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள் அழிய வேப்பிலையை அரைத்து தண்ணீரில் கலந்து குளிக்கலாம்.
மஞ்சளில் உள்ள நோய் எதிர்ப்பு பண்புகள் உடலில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்க உதவுகிறது.எனவே குளிக்கும் நீரில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள்.
உடல் வாசனையாக இருக்க ரோஜா இதழ் மற்றும் சந்தனத்தை பொடித்து நீரில் கலந்து குளிக்கலாம்.எலுமிச்சை சாறு கலந்த நீரில் குளித்து வந்தால் உடலில் வியர்வை நாற்றம் ஏற்படுவது கட்டுப்படும்.
அதேபோல் சோடா உப்பு கலந்த நீரில் குளித்து வந்தால் உடல் பிரஸாக இருக்கும்.கடலை மாவு பூசி குளித்தால் வியர்வை சுரப்பது குறையும்.சோப் பயன்படுத்துவதற்கு பதில் குளியல் பொடியை பயன்படுத்தினால் உடலில் துர்நாற்றம் வீசுவது கட்டுப்படும்.அக்குள் மற்றும் அந்தரங்க பகுதியில் வேப்பிலை மற்றும் மஞ்சள் கலவையை பூசி குளித்தால் துர்நாற்றம் வீசுவது குறையும்.