Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாத்ரூம்.. மஞ்சள் கறை மற்றும் துர்நாற்றம் நீங்க எளிய தீர்வு இதோ..!!

#image_title

பாத்ரூம்.. மஞ்சள் கறை மற்றும் துர்நாற்றம் நீங்க எளிய தீர்வு இதோ..!!

நாம் உபயோகிக்கும் பாத்ரூமை சுத்தமாக வைத்துக் கொள்வது நமது கடமை ஆகும். பாத்ரூம் தூய்மையாக இருந்தால் தான் உடலுக்கு எவ்வித நோய் பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும். சுத்தமான பாத்ரூமை குழந்தைகள் பயன்படுத்துவதினால் அவர்களுக்கு நோய் பாதிப்பு எளிதில் ஏற்படாமல் இருக்கும்.

அதேபோல் பாத்ரூம் கறை படிந்து நாற்றத்தை கிளம்பினால் பயன்படுத்த அசௌவ்கரியமாக இருக்கும். வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி இதனை சுத்தம் செய்தால் புதிது போன்று பளிச்சிடும்.

தேவையான பொருட்கள்:-

*போராக்ஸ் தூள்

*வாஷிங் பவுடர்

*எலுமிச்சை சாறு

*வினிகர்

செய்முறை…

ஒரு பாக்கெட்டில் 1 லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் அதில் 3 தேக்கரண்டி போராக்ஸ் தூள் சேர்த்துக் கொள்ளவும். பிறகு வாஷிங் பவுடர் 2 தேக்கரண்டி, 2 தேக்கரண்டி வினிகர் மற்றும் 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து விடவும்.

பின்னர் இதை பாத்ரூம் முழுவதும் தெளித்து விட்டு 15 நிமிடங்களுக்கு ஊற விடவும். பிறகு ஒரு பிரஷ் கொண்டு பாத்ரூம் முழுவதும் தேய்த்து விடவும். பிறகு தண்ணீர் கொண்டு அடித்து விடவும். இவ்வாறு செய்தால் பாத்ரூமில் இருக்கும் மஞ்சள் கறை துர்நாற்றம் முழுவதும் நீங்கி புது பாத்ரூம் போல் பளிச்சிடும்.

Exit mobile version