யாஷிகாவை, அவரது தோழி பார்க்க வந்ததற்கு இதுதான் காரணமா?!! பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்!!

0
167

யாஷிகாவை, அவரது தோழி பார்க்க வந்ததற்கு இதுதான் காரணமா?!! பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்!!

தமிழ் சினிமாவில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த் ஆவார். இவர் தமிழில் சில படங்களில் மட்டும் நடித்தார். இதனைத் தொடர்ந்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 2என்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின், இவருக்கு ஒரு சில பட வாய்ப்புகள் மட்டும் கிடைத்தது.

இந்த நிலையில், இவர் தற்போது எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். யாஷிகா சமீபத்தில் நண்பர்களுடன் மகாபலிபுரம் சென்று பார்ட்டி கொடுத்துவிட்டு, திரும்பும் வழியில் விபத்து நடந்த காரணத்தினால் இவருடைய தோழி பவானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து யாஷிகா மற்றும் பின் இருக்கையில் இருந்த அவரது நண்பர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரையிலும் யாஷிகாவின் தோழி இறந்ததனை அவரிடம் கூறவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் இருந்து வந்த தோழி பவானி, சினிமா வாய்ப்பு கேட்பதற்காக யாஷிகா ஆனந்தை பார்க்க வந்தார் என்று நடிகர் பயில்வான் கூறி இருக்கின்றார்.

யாஷிகா ஆனந்த்க்கு தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்து இருப்பதாகவும், மயக்க நிலையில் உள்ளதாக கூறுகின்றனர். மேலும், மூளையில் மற்றொரு அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாகவும் கூறி இருக்கின்றனர். இதனையடுத்து யாஷிகா ஆனந்த் மயக்க நிலையிலே இருப்பதால் அதிர்ச்சி தகவல் எதையும் கூறாமல் இருப்பது நல்லது என்று தோழி இருந்ததனை கூட கூறாமல் இருந்து வருகிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.