Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கவனத்துடன் இருக்க வேண்டும்; காவல்துறையினருக்கு டி.ஜி.பி அறிவுறுத்தல்!

குடியரசு தின விழா அமைதியான முறையில் நடைபெறும் வகையில், காவல்துறையினர் அனைவருக்கும் தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு அறிவுரைகள் வழங்கினார்.

நாட்டின் 73 வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு காவல்துறையினர் அனைவருக்கும் தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதனடிப்படையில், அனைத்து காவல் அதிகாரிகளும், பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றிய விவரங்களை தெரிந்திருக்க வேண்டும் என்றும், மாநகரங்களில் நுண்ணறிவு பிரிவு மற்றும் மாவட்டங்களில் தனிப்பிரிவு காவலர்களை அதிகபட்ச ஆற்றலோடு செயல்பட அறிவுறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், அரசியல் தலைவர்கள் முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள நபர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அதிக அளவில் மக்கள் கூடும் இடங்கள், வணிக வளாகங்கள், விமான நிலையம், ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களில் பாதுகாப்பினை அதிகப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

அதுமட்டுமின்றி, பாதுகாப்பு திட்டத்தினை ஏற்படுத்தி, சுழற்சிமுறையில் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை பணியமர்த்தி தங்கும் இடங்கள், தனியார் விருந்தினர் இல்லங்கள், சுற்றுலா விடுதிகளில் சந்தேகிக்கும் வகையில் நபர்கள் தங்கியுள்ளனரா என சோதனை செய்ய வேண்டும்.

Exit mobile version