Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பீஸ்ட் படத்தின் அடுத்த அப்டேட்! வில்லன் ரோலில் இவரா?

Beast Movie Next Update! Who is in the villain role?

Beast Movie Next Update! Who is in the villain role?

பீஸ்ட் படத்தின் அடுத்த அப்டேட்! வில்லன் ரோலில் இவரா?

கொரோனா தொற்றின் மூன்றாவது அலைக்கு முன்பு வெளிவந்த படம் தான் மாஸ்டர்.பல எதிர்பார்ப்புகளை கடந்து இப்படம் வெளிவந்ததால் மக்கள் ஆவலுடன் திரையரங்குகளுக்கு சென்று பார்த்தனர்.அந்த படத்திற்கு அதிகப்படியான வசூல் வேட்டையும் கொடுத்தது.மக்கள் மனதில் அடுத்த படியாக மாஸ்டர் என்ற பெயரில் இடம் பிடித்தார்.அதனையடுத்து தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பீஸ்ட் படத்தில் நடிக்க உள்ளார்.

அந்த படத்தின் 1லுக் போஸ்டர் வெளிவந்த போதே மக்கள் அனைவரும் அதனை இணையத்தில் பகிர்ந்தனர்.அதனால் அந்த போஸ்டர் அதிகளவு வைரலானது.இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளார்.இந்த படத்தின் கதாநாயகியாக பூஜா நடிக்க உள்ளார்.மேலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் யோகிபாபு,விடிவி கணேஷ் ஆகியோர் நடிக்க உள்ளனர்.இந்த படத்தின் இசையமைப்பாளராக அனிருத் உள்ளார்.அதுமட்டுமின்றி இந்த படத்தில் மேலும் அபர்ணா தாஸ்,நடிகர் ஷையின் டோம் சகோ,அன்குர் விகல் ஆகியோர் இனணந்து நடிக்க உள்ளனர்.

இந்த கதையின் திருப்பமான முக்கிய கதாபாத்திரத்தில் தனுஷ் அண்ணன் நடிக்க உள்ளார்.இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் பார்ப்பதற்கே திரிலிங்கான கதை போல உள்ளது.இந்த படத்தின் கதைக்கு ஏற்றவாறு வில்லன் கதாபாத்திரத்தில் இயக்குனர் செல்வராகவன் நடிக்க உள்ளார்.இவர் நடிக்கும் நெல்சன் இயக்கத்தில் நடிக்கும் முதல் படம் இதுவே ஆகும்.இயக்குனர் செல்வராகவன் தற்போது ஆயிரத்தில் ஒருவன் 2 எடுக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டார்.இதற்கிடையே இந்த படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதால் மக்களுக்கு நல்ல விருந்தை தருவது போல உள்ளது.

Beast Movie Next Update! Who is in the villain role?
Beast Movie Next Update! Who is in the villain role?

காமெடி,திரில்லிங்,ஆக்ஷன் ஆகிய அனைத்தும் கலந்த படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.சென்ற படத்தை காட்டிலும் இந்த படத்தின் வசூல் வேட்டை சற்று அதிகமாக காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஏனென்றால் நெல்சன் கடைசியாக எடுத்த கோலமாவு கோகிலா பெரும் வெற்றியடைந்தது.அதனால் இப்படமும் அதேபோல வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதுமட்டுமின்றி இவர் எடுத்து முடித்துள்ள அடுத்த படமான சிவாகர்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படமும் வெளிவர உள்ளது.இப்படத்தை மக்கள் அனைவரும் எதிர்பாத்து காத்துக்கொண்டுள்ளனர்.

Exit mobile version