Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உல்லாசத்திற்கு வர மறுத்த பெண்! குழவி கல்லால் அடித்துக் கொன்ற கள்ளக்காதலன்!

சிதம்பரத்தை அடுத்துள்ள புவனகிரி அருகே உள்ள கீழமணக்குடி கிராமத்தைச் சார்ந்தவர் சீதா இவர் சிதம்பரத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவ பரிசோதனை மையத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். இந்த சூழ்நிலையில் கடந்த 13ஆம் தேதி காலையில் இவர் வீட்டில் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இது தொடர்பாக அவருடைய மகள் புவனகிரி காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். இந்த புகாரினடிப்படையில் காவல்துறையினர் விசாரணை செய்யத் தொடங்கினார். மோப்ப நாய் கொண்டு காவல்துறையினர் விசாரணை செய்தபோது மோப்பநாய் கொண்டு நடைபெற்ற வீட்டின் பின்புறம் சென்று அங்கு கிடந்த குழவிக் கல்லை கவ்விப்பிடித்தது. இதனை வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த சூழ்நிலையில் கொலை செய்யப்பட்ட சீதாவின் அண்டை வீட்டில் வசித்து வரும் கட்டிட தொழிலாளியான குமார் என்பவர் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் உண்டானது. இதனை தொடர்ந்து புவனகிரி காவல்துறை ஆய்வாளர் சரஸ்வதி மற்றும் காவல் துறையைச் சார்ந்தவர்கள் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர். அப்போது அவரை அடித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

சீதாவின் அண்டை வீட்டில் வசிக்கும் இவர் புதுச்சேரியில் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். வாரம் ஒருமுறை விடுமுறையில் குமார் வீட்டிற்கு வருவார் சீதாவின் கணவர் இல்லாத காரணத்தால், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் சீதாவுக்கும், குமாருக்கும், கள்ளக்காதல் உண்டானது. இதனை தொடர்ந்து புதுச்சேரியிலிருந்து வந்தவுடன் குமார் சீதாவுடன் உல்லாசமாக இருப்பார் என்று சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், சம்பவம் நடைபெற்ற அன்று இரவு குமார் சீதாவின் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அப்போது சீதாவை உல்லாசத்திற்கு ஆயிரத்தி இருக்கிறார் அதற்கு சீதா மறுக்கவே இதனால் குமார் வலுக்கட்டாயமாக சீதாவுடன் உல்லாசத்திற்கு முயற்சி செய்தபோது சீதா மீண்டும் மறுத்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக, ஆத்திரமுற்ற குமார் அருகிலிருந்த குழவிக் கல்லை எடுத்து அவருடைய தலையில் அடித்து கொலை செய்திருக்கிறார். அதன்பிறகு தப்பியோடிவிட்டார் இதனை தெரிந்துகொண்ட புவனகிரி காவல்துறையினர் அவரை கைது செய்தனர். இதனை தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

Exit mobile version