Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உடம்பு நல்லா புசு புசுண்ணு ஆக இத சாப்பிட்டால் போதும்!

எல்லாரும் உடம்பு குறைய வேண்டும் என நினைப்பது உண்டு, ஆனால் நமக்கு மட்டும் உடம்பு ஏறவில்லயே என வேதனை படுவோர்க்கு தான் இந்த பதிவு.

 

தேவையான பொருட்கள்:

 

1. திரிபலா சூரணம்.

2. கொள்ளு – 100 கிராம்

3. கோதுமை – 100 கிராம்

4. பச்சைப்பயறு – 100 கிராம்

5. உளுந்து – 100 கிராம்

6. கொண்டைக் கடலை – 100 கிராம்

7. எள் – 100 கிராம்

8. பச்சரிசி – 100 கிராம்

9. காராமணி – 100 கிராம்

10. துவரை – 100 கிராம்

 

 

செய்முறை:

 

1. ஒருகிலோ அளவில் பாத்திரத்தில் எடுத்து, அதில் 5 லிட்டர் தண்ணீர் ஊற்றி கஷாயம் செய்யவும். தண்ணீர் பாதியாக சுண்டி வரும் சமயத்தில் கசாயத்தை இறக்கி ஆறவிட வேண்டும்.

2. மேலே கூறிய அனைத்து பொருளையும் ஒன்றுகலந்து ஆறிய திரிபலா கஷாயத்துடன் சேர்த்து, ஓர் இரவு முழுவதும் ஊற வைக்கவும்.

3. மறுநாள் காலையில் வெய்யிலில் நன்கு காயவைத்து, அரைத்து, மாவை சலித்துப் பத்திரப்படுத்தவும்.

4. இதில் இரண்டு கிராம் அளவில் தேனுடன் அல்லது 50 கிராம் மாவை தண்ணீர் கரைத்துக் காய்ச்சி கஞ்சியாகவோ அல்லது களியாகவோ செய்து சாப்பிடலாம்.

5. இதனால் நோய் தாக்கதினால் இளைத்த உடல் செழிக்கும்.

6. நன்கு புஸ் புஷ் என மாறிவிடுவார்கள்.

Exit mobile version