வந்தாச்சு குளிர்காலம்! பனி கால பராமரிப்பு முறைகள்!

0
266

வந்தாச்சு குளிர்காலம்! பனி கால பராமரிப்பு முறைகள்!

பனிக்காலம் அனைவருக்கும் பிடித்த ஒன்று. வின்டர் சீசன் வந்தாலே உடலில் மட்டும் இல்லை மனதிலும் ஒரு வித குளிர்ச்சி தரும். சந்தோஷத்தை தந்தாலும் சில தொந்தரவுகள் பனிக்காலத்தில் ஏற்படும். அவற்றில் ஒன்று சரும வறட்சி. மற்ற காலங்களை விட மூன்று மடங்கு அதிக வறட்சி இந்த சீசனில் ஏற்படும். இதனால் தோலில் வறட்சி ஏற்படுவதோடு வெடிப்புகளும் வரும் அவற்றை சரிசெய்வது எவ்வாறு என்பதை பார்ப்போம்.

1.செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன் அல்லது உங்களுக்கு தேவையான அளவு எடுத்துக் கொண்டு வெடிப்பு உள்ள இடங்களில் தேய்க்கவும் . ஒரு பத்து நிமிடம் கழித்து ஏதேனும் ஒரு குளியல் பொடி கொண்டு குளிக்கலாம். சோப் தவிர்ப்பது நல்லது. தலைக்கும் சேர்த்து தேய்த்து குளிக்கலாம்.

2. பனிக்காலத்தில் முகம், கை, கால்கள் வறண்டு போய் இருக்கும். ஏதேனும் ஒரு மாய்ஸ்ரைசர் அல்லது கற்றாழை ஜெல் தடவுவது வறட்சியை போக்க உதவும்.

3. தாகம் எடுக்கவில்லை என்று தண்ணீர் குடிக்காமல் இருப்பது நல்லது இல்லை. மேலும் வறண்டு போகும்.எனவே சரியான அளவில் தண்ணீர் குடிப்பது நல்லது. உடலை ஈரப்பதமாக வைத்திருக்கும்.

4. உதடுகள் வறண்டு போனால் வெண்ணெய், லிப் பாம், அல்லது விளக்கெண்ணெய் தடவலாம். இது அதிக நேரம் ஈரப்பதத்தை தக்க வைக்கும். கலரில்லாத லிப் பாம் உபயோகப் படுத்துவது நல்லது.

5.பனி விழுந்த குளிர் நீரில் முகம் கழுவ கூடாது. மேலும் இரவில் உறங்கும் போது கற்றாழை ஜெல் தடவுவது நல்லது.

6. வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பது, வெதுவெதுப்பான சாப்பாடு சாப்பிட வேண்டும்.உடலுக்கு சூடு தரும் உணவு வகைகளை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

கோதுமை, பாதாம், வேர்க்கடலை, புரக்கோலி, கேரட், பச்சை கீரைகள் போன்றவற்றை உணவில் சேர்த்து வர வேண்டும்.

நிறைய மிளகு சேர்த்து ஏதாவது ஒரு சூப் குடிப்பது நல்லது.

குளிர்காலத்தில் சற்று அதிகமாகவே தூங்க தோன்றும். சரியான உடற்பயிற்சி மேற்கொள்வது நம்மை பொலிவாக வைத்திருக்கும்.

தலைக்கு செம்பருத்தி பூ, இலை, சீயக்காய் அரைத்து தேய்த்து குளிக்கலாம். பொடுகு தொல்லை அதிகம் வரும் என்பதால் வாரம் இருமுறை தலைக்கு குளிப்பது நல்லது.

தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், ஆலிவ் ஆயில், கடுகு எண்ணெய் இவற்றில் ஏதேனும் ஒரு ஆயிலை உடல் முழுவதும் தேய்த்து 15 நிமிடங்கள் ஊற வைத்து குளித்தால் முடி, சரும வறட்சி பிரச்சினைகள் தீரும்.