பொதுவாக பெண்கள் தற்போது முகம் வெள்ளையாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பியிருந்து மாறி எந்த நிறமாக இருந்தாலும் பரவாயில்லை முகம் மாசு மரு இல்லாமல் பளிச்சென்று தெளிவாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறார்கள்.
இதற்காக சில பெண்கள் பல மணி நேரம் ஸ்கின் கேரில் மூழ்கி விடுகிறார்கள். சிலர் எதிலும் பொறுமையாக காத்திருக்காமல் உடனடி ரிசல்ட் வேண்டும் என்று புது புது விஷயங்களை முயற்சி செய்து, தங்களின் முகத்தை கெடுத்து கொள்கிறார்கள். சிலர் செயற்கை முறையை பல ஆயிரங்களை செலவழித்து அழகை பெற நினைக்கின்றனர்.
முக அழகினை மேம்படுத்த இயற்கையிலே நம் கைக்கு எட்டும் வகையில் நிறைய பொருட்கள் இருக்கின்றன, அதனை சரியான முறையில் பயன்படுத்தினாலே மிகச்சிறந்த ரிசல்ட்டை குறைந்த நாளிலேயே பெறலாம்.
தர்பூசணி கலவை:
முகம் ஜொலிப்பதற்கும், வறண்ட சருமத்திற்கும் மிகப்பெரிய தீர்வு தர்பூசணி கலவை. தர்பூசணி பழத்தின் சதைகளை எடுத்து முகம் கழுத்து பகுதியில் தேய்த்து விட்டு சிறிது நேரம் கழித்து முதலில் இளஞ்சூடான நீரில் கழுவி விட்டு பின்பு குளிர்ந்த நீரில் கழுவினால் சருமத்தின் பொலிவு அதிகரிக்கும்.
தர்பூசணியின் சதைப்பகுதியை எடுத்து அதில் பால் அல்லது தயிர் கலந்து முகத்தில் தடவி வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளி நீங்கும். மேலும் இதனுடன் அரிசிமாவு கலந்தால் சிறந்த ஸ்கரப்பராக இருக்கும்.
ஆப்பிள் கலவை:
ஆப்பிளை அரைத்து அதில் தேன் கலந்து முகத்தில் பூசி இருபது நிமிடங்கள் கழித்து முகத்தைகழுவி வர முகத்தில் அனைத்து பிரச்சனைகளும் நீங்கும். ஆப்பிள் மற்றும் நேந்திரம் பழங்களை கலந்து அதில் பால் ஆடை சேர்த்து முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்து வந்தால் முகம் நன்கு பொலிவு பெரும்.
தக்காளி சாறு:
தக்காளி சாறும், எலுமிச்சை சாறும் கலந்து முகம் மற்றும் கை கால்களில் தேய்க்கவேண்டும். சிறிது நேரம் கடந்ததும் கழுவி விட வேண்டும். தக்காளி சாறு, தயிர், மஞ்சள் தூள் ஆகியவைகளை கலந்து சருமத்தில் பூசினால் முகத்தின் நிறம் மாறும். சரும சுருக்கங்களை போக்க தக்காளிபழத்துடன் சிறிதளவு நெல்லிக்காய் சாறு கலந்து அரைத்து முகத்தில் தேய்க்கவேண்டும். முகத்தில் உபயோகப்படுத்துவது மட்டுமல்லாமல் ஒரு தக்காளி பழம், ஒரு கேரட் இரண்டையும் மிக்சியில் அரைத்து வடிகட்டி தினமும் பருகிவரவேண்டும். பருகினால் சருமத்திற்கு நிறமும், ஜொலிப்பும் கிடைக்கும்.
.