Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கொரோனா வைரஸ் எதிரொலி: சீனாவை தனிமைப்படுத்தும் உலக நாடுகள்

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனாவில் மிக பயங்கரமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த போதும் சீன அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சீனாவில் இருந்து வெளிநாட்டுக்கு செல்லும் நபர்களால் இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவிலும் ஓரிரு பேருக்கு இந்த வைரஸ் பரவி இருப்பதாகவும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் சீனாவை உலக நாடுகள் தனிமைப்படுத்த தொடங்கிவிட்டன. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சீனாவுடனான எல்லையை மூட ரஷ்ய அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் சீனாவில் இருக்கும் வெளிநாட்டினர் பலரை வெளியேற்ற அந்தந்த நாடுகளில் இருந்து சிறப்பு விமானங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன

மேலும் சீனாவில் உள்ள பல்வேறு நாடுகளின் தூதரக அலுவலகம் மூடப்பட்டு அந்தந்த நாட்டு தூதர்கள் திரும்ப அழைக்கப்பட்டு வருகின்றனர். மேலும் சீனாவுக்கு செல்லும் பல்வேறு நாட்டின் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் தற்போது சீனா உலக நாடுகளில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது

Exit mobile version