வண்டு மற்றும் பூச்சி கடிக்கு இனி மருந்து மாத்திரை தேவை இல்லை!! இந்த ஒரு கீரை போதும்!!
நம்மை வண்டு ஏதாவது கடித்தால் அந்த இடத்தில் புண் ஏற்படும். வண்டு கடி என்பது ஆரம்ப நிலையில் கடிபட்ட இடத்தில் தோல் அரிக்கும். இது மற்ற இடங்களுக்கு பரவும் போது தோல் சிவந்து தோல் தடித்து விடும். இந்த அரிப்பு அதிகரிக்கும் போது அந்த இடத்தில் வீக்கம் ஏற்படுகிறது. இது ஒரு சிலருக்கு காய்ச்சலை வரவழைக்கும்.
குளிர் காலங்களில் வண்டுகள் மற்றும் பூச்சிகள் வீட்டிற்குள் வரும். இது கடிப்பது நமக்கு தெரியாது. கடித்த பிறகு அந்த இடத்தில் அரிப்பு மற்றும் வீக்கம் ஏற்படும் போது தான் நமக்கு வண்டோ அல்லது பூச்சியோ கடித்தது தெரிய வரும். இது போன்ற வண்டு கடியை குணமாக்கும் இயற்கை வைத்திய முறையை பார்க்கலாம்.
அகத்தி கீரை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த அகத்தி கீரையானது தோல் சம்பந்தமான நோய்களை தீர்ப்பதற்கு உதவுகிறது. மேலும் வண்டு கடித்து விட்டால் அந்த இடத்தில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்று உண்டாகும் அது போன்ற தொற்றுக்களையும் அகத்தி கீரை சரி செய்து விடும். அகத்தி கீரையில் புண்களை சரி செய்யும் தன்மையும், அந்த புண்களினால் ஏற்படும் அரிப்பை சரி செய்யும் தன்மையும் உண்டு.
முதலில் அகத்தி கீரையை நன்றாக சுத்தம் அரைத்து கொள்ளவும். இதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு எழுமிச்சை சாறை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பிறகு இதை வண்டு கடி இருக்கும் இடத்தில் தடவவும். இதை காலை மற்றும் மாலை என இரு வேளைகள் தடவவும். இப்படி செய்வதால் சீக்கிரமாக வண்டு கடி, அதனால் ஏற்படும் புண் மற்றும் அரிப்பு போன்றவை குணமாகும்.