பளபளப்பான சருமத்திற்கு பீட்ரூட் க்ரீம் மட்டும் போதும்!! 10 நாளில் பலனை கண்கூட காண ட்ரை பண்ணுங்க!!

0
82

மனிதர்களுக்கு வயதான பிறகு தோல் சுருக்கம் வருவது சாதாரண ஒரு விஷயம் தான்.ஆனால் அந்த வயதிலும் இளமை தோற்றத்துடன் இருக்க பீட்ரூட் பெரிதும் உதவும்.பொதுவாக சரும நிறம் மேம்பட,இரத்தம் ஊற பீட்ரூட் ஜூஸ் செய்து குடிப்பதை பலரும் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.அந்தவகையில் சரும சுருக்கம் மறைய பீட்ரூட்டில் க்ரீம் செய்து பயன்படுத்துங்கள்.இந்த பீட்ரூட் க்ரீம் வயதாவதில் இருந்து நம்மை காக்கிறது.

தேவையான பொருட்கள் இதோ:

1)பீட்ரூட் கிழங்கு – ஒன்று
2)கற்றாழை ஜெல் – ஒரு தேக்கரண்டி
3)கிளிசரின் – சிறிதளவு

பீட்ரூட் சரும ஆரோக்கியதத்திற்கு உகந்த பொருளாக திகழ்கிறது.கற்றாழை ஜெல்லில் இருக்கின்ற வைட்டமின் ஈ சருமத்தை மிருதுவாக வைத்துக் கொள்ள உதவுகிறது.சரும வறட்சியை போக்க கிளிசரின் பெரிதும் உதவுகிறது.

செய்முறை விளக்கம்:

**முதலில் பீட்ரூட் கிழங்கை தோல் நீக்கிவிட்டு அதன் சதை பற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.

**பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

**இந்த பீட்ரூட் பேஸ்டை பாத்திரத்தில் போட்டு குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.பீட்ரூட் சாறு நன்கு கொதித்து வந்ததும் அதில் கற்றாழை ஜெல் சேர்க்க வேண்டும்.

**ஒரு கற்றாழை மடலின் தோலை நீக்கிவிட்டு அதன் ஜெல்லை தனியாக பிரித்து கொதிக்கும் பீட்ரூட்டில் சேர்த்து கலந்துவிட வேண்டும்.

**பீட்ரூட் சாறில் கற்றாழை ஜெல் நன்கு மிக்ஸ் ஆனதும் சிறிதளவு கிளிசரினை அதில் போட்டு மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.இதை நன்கு ஆறவைத்து ஒரு பாட்டிலுக்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.பிறகு ப்ரீசரில் வைத்து தினமும் சருமத்திற்கு பயன்படுத்தி வந்தால் பளபளப்பாக மாறிவிடும்.

**சருமத்தில் உள்ள நச்சுக் கழிவுகள் நீங்கி சரும ஆரோக்கியம் மேம்பட இந்த பீட்ரூட் க்ரீமை பயன்படுத்தலாம்.அதேபோல் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் சருமம் சுருக்கம் ஏற்படுவது கட்டுப்படும்.

**அதேபோல் தினமும் பீட்ரூட்டை அரைத்து சாறு எடுத்து பருகி வந்தால் சரும சுருக்கம் நீங்கி பொலிவான மற்றும் மிருதுவான சருமம் கிடைக்கும்.கெமிக்கல் சோப்பிற்கு பதில் பீட்ரூட் சோப் தயாரித்து பயன்படுத்தி வந்தால் சருமத்தில் நல்ல மாற்றம் தென்படும்.பீட்ரூட் சரும நிறத்தை மாற்ற பெரிதும் உதவும் என்பதால் அனைவரும் இதை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.