ஆண்மையை அதிகரிக்கும் பீட்ரூட்!!! இதில் கேசரி எவ்வாறு செய்வது!!?

0
88
#image_title

ஆண்மையை அதிகரிக்கும் பீட்ரூட்!!! இதில் கேசரி எவ்வாறு செய்வது!!?

உடலுக்குத் தேவையான பல நன்மைகள் தரக்கூடிய பீட்ரூட்டில் கேசரி எவ்வாறு செய்வது என்பது பற்றியும் பீட்ரூட்டில் உள்ள நன்மைகள் பற்றியும் இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம்.

உடலுக்குத் தேவையான சத்துக்களை அளிப்பதில் பீட்ரூட் கிழங்கும் ஒன்று. இந்த பீட்ரூட்டை சாப்பிடுவதால் இரத்தம் சுத்தமாகும். மேலும் உடலில் இரத்தம் அதிகரிக்கும். வயிறு வலி போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் பீட்ரூட்டை சாப்பிட்டு வரலாம். வயிறு வலிக்கு நல்ல பலன் கிடைக்கும்.

இந்த பீட்ரூட்டில் உடலுக்குத் தேவையான பல சத்துக்கள் உள்ளது. பீட்ரூட்டில் உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து, வைட்டமின் பி1, நைட்ரேட் சத்துக்கள், மெக்னீசியம், பொட்டாசியம் நார்ச்சத்து பான்ற பல சத்துக்கள் உள்ளது. கர்ப்பிணிப் பெண்களுக்குத் தேவையான புலிக் அமிலம் பீட்ரூட்டில் இருக்கின்றது.

இந்த பீட்ரூட்டை சாப்பிட பிடிக்காதவர்கள் ஜூஸ் செய்து குடிக்கலாம். அவ்வாறு குடிக்க முடியவில்லை என்றால் இனிப்பு வகைகள் செய்து சாப்பிடலாம். அந்த வகையில் அடுத்த பீட்ரூட்டில் கேசரி எவ்வாறு செய்வது என்று பார்க்கலாம்.

பீட்ரூட் கேசரி செய்யத் தேவையான பொருட்கள்…

* வறுத்த வெள்ளை ரவை – ஒரு கப்
* பீட்ரூட் – ஒன்று
* சர்க்கரை – அரை கப்
* பால் – ஒன்றரை கப்
* நெய் – கால் கப்
* முந்திரி – சிறிதளவு

பீட்ரூட் கேசரி செய்யும் முறை…

முதலில் பீட்ரூட்டை எடுத்து நன்கு கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதை மிக்சியில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு கடாயில் பால் ஒன்றரை கப் சேர்த்து பின்னர் அதில் வறுத்த வெள்ளை ரவை சேர்த்துக் கொள்ள வேண்டும். ரவை வெந்த பிறகு இதில் பீட்ரூட் சாறு சேர்க்க வேண்டும். பின்னர் இதில் சர்க்கரை அரை கப் சேர்க்க வேண்டும். பின்னர் இதை நன்கு கிளறி. விட்டுக்கொண்டு இருக்க வேண்டும். பால் மற்றும் பீட்ரூட் சாறு வற்றும் வரை இதை கிளறி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். பால் மற்றும் சாறு வற்றிய பிறகு இதை இறக்கி வைக்க வேண்டும்.

பின்னர் மீண்டும் அடுப்பை பற்ற வைத்து ஒரு சிறிய அளவிலான கடாய் வைத்து அதில் நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் முந்திரியை சேர்த்து நன்கு வறுத்து பின்னர் இந்த முந்திரியை தயார் செய்து வைத்துள்ள கேசரியில் சேர்த்து கலந்து விட்டால் சூடான சத்து மிகுந்த்த சுவையான பீட்ரூட் கேசரி தயார்.

பீட்ரூட் மூலம் கிடைக்கும் நன்மைகள்…

* தொடர்ந்து பீட்ரூட் சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கு ஆண்மைத் தன்மை அதிகரித்கின்றது.

* பீட்ரூட் சப்பிடுவதன் மூலமாக கல்லீரல் பாதிப்பு சரி செய்யப்படுகின்றது.

* பீட்ரூட் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலமாக பித்த வாந்தாயை தடுக்கலாம்.

* அல்சர் குணமாக வேண்டும் என்றால் பீட்ரூட் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.

* பீட்ரூட் சருமத்திற்கும் முகத்திற்கும் பொலிவைத் தரும்.

* பீட்ரூட்டை பச்சையாக அறுத்து அதை எலுமிச்சை சாற்றில் தேய்த்து சாப்பிட்டு வந்தால் இரத்ததில் சிவப்பணுக்களின் செல்கள் அதிகரிக்கும்.

* பீட்ரூட்டை சாப்பிடுவதால் உடலில் சோர்வு நீங்கி உடல் புத்துணர்ச்சி பெறுகின்றது.

* பீட்ரூட் சாறுடன் வெள்ளரி சாறு கலந்து சாப்பிட்டு வந்தால் சிறு நீரகங்களும் பித்தப்பைகளும் சுத்திகரிக்கப்படுகின்றது.

* புற்று நோய் உள்ளவர்கள் தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால் புற்றுநோய் பரவுவது தடுக்கப்படும்.