Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நம்புங்க.. இப்படி செய்தால் வாய் துர்நாற்றம் சில நிமிடங்களில் நீங்கி விடும்..!!

#image_title

நம்புங்க.. இப்படி செய்தால் வாய் துர்நாற்றம் சில நிமிடங்களில் நீங்கி விடும்..!!

வாயில் கெட்டை வாடை வரத் தொடங்கிவிட்டல் நம் தன்னம்பிக்கை குறையத் தொடங்கிவிடும். உணவு உண்ட பின்னர் வாயை சுத்தம் செய்யவில்லை என்றால் உணவுத் துகள்கள் பற்களின் இடுக்குகளில் தங்கி வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தி விடும். வாய் துர்நாற்றம் ஏற்பட வேறு சில காரணங்களும் சொல்லப்படுகிறது. அவை, பல் சொத்தை, ஈறுகளில் பிரச்சனை, வயிற்றுப்புண்
அஜீரணக் கோளாறு, குடல் தொடர்பான பிரச்சனை, நாக்கில் படிந்துள்ள வெள்ளை படலம், புகை பிடித்தல், அல்சர், மது அருந்துதல் ஆகும்.

வாய் துர்நாற்றம் நீங்க…

தேவையான பொருட்கள்:-

*இலவங்கம்

*ஏலக்காய்

*புதினா

*எலுமிச்சை சாறு

*உப்பு

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். அடுத்து 5 இலவங்கம், 1 ஏலக்காயை இடித்து சேர்த்து கொள்ளவும்.

பின்னர் 5 புதினா இலைகள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். 1 கிளாஸ் தண்ணீர் 1/2 கிளாஸாக வரும் வரை கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும். பின்னர் இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி 10 துளி எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து கலக்கி காலையில் பருகவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தோம் என்றால் வாய் துர்நாற்றம் நீங்கிவிடும்.

Exit mobile version