நம்புங்க.. முடி உதிர்வு பிரச்சனைக்கு 10 கொய்யா இலையில் தீர்வு இருக்கு!!

0
246
#image_title

நம்புங்க.. முடி உதிர்வு பிரச்சனைக்கு 10 கொய்யா இலையில் தீர்வு இருக்கு!!

நமக்கு அழகு சேர்ப்பதில் தலை முடி முக்கிய பங்கு வகிக்கிறது. தலை முடி அடர்த்தியாகவும், கருமையாகவும் இருந்தால் தான் பார்க்க இளமை தோற்றத்துடன் இருப்போம். ஆனால் நவீன கால வாழ்க்கை முறையில் தலைமுடி வளர்ச்சி என்பது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் தலை முடி உதிர்வு, இளநரை, பொடுகு, அறிவிப்பு, தலைமுடி வறட்சி உள்ளிட்டவைகள் ஏற்படுகிறது. இந்த பாதிப்பை சரி செய்ய கொய்யா இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து தலைகளுக்கு பயன்படுத்தி வரலாம்.

தேவையான பொருட்கள்:-

*கொய்யா இலை

*தண்ணீர்

செய்முறை…

ஒரு கைப்பிடி அளவு கொய்யா இலையை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து கொள்ளவும்.

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1/2 லிட்டர் தண்ணீர் ஊற்றி சூடு படுத்தவும். பின்னர் அதில் சுத்தம் செய்து வைத்துள்ள கொய்யா இலையை போட்டு நிறம் மாறும் வரை கொத்தி விட்டு அடுப்பை அணைத்துக் கொள்ளவும்.

பின்னர் இதை நன்கு ஆறவிட்டு ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றவும். இந்த கொய்யா நீரை முடிகளின் வேர்காள் பகுதியில் படுமாறு ஸ்ப்ரே செய்து நன்கு மஜாஜ் செய்து கொள்ளவும்.

1 மணி நேரம் கழித்து தண்ணீர் கொண்டு தலை முடியை அலசி சுத்தம் செய்து கொள்ளவும். இவ்வாறு வாரம் இரு முறை பயன்படுத்தி வந்தால் கூந்தலின் வலிமை மற்றும் வளர்ச்சி அதிகரிக்கும்.