மருத்துவ குணங்கள் நிறைந்த ஓமத்தின் பயன்கள்!

0
172

ஓமம் என்பது பார்ப்பதற்கு சிறிதாக இருக்கும் ஆனால் இதன் மருத்துவ குணங்களை மிகப்பெரியது.இது குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பசியை தூண்ட உதவுகிறது.

நெஞ்சு சளி மற்றும் வறட்டு இருமல் போன்றவைகளுக்கு ஒரு சிறந்த மருந்தாக ஓமம் விளங்குகிறது.மேலும் வயிற்றுப்புண்ணுக்கு ஓமம் கசாயத்தை குடித்து வந்தால் வயிற்றுப்புண் குணமடையும்.

ஒரு பாத்திரத்தில் 100 மில்லி லிட்டர் அளவிற்கு தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு ஓமம் கலந்து அந்த தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்த பின்னர் அந்த தண்ணீரை நன்றாக வற்ற வைத்து அதை குடித்து வந்தால் நெஞ்சு சளி நீங்கும்.ஓமப்பொடியுடன் தண்ணிரில் சிறிது உப்பு கலந்து அந்த தண்ணீரை குடித்து வந்தாலும் நெஞ்சு சளி என்பது குணமாகும்.

பசியின்மை ஏற்பட்டால் சிறிது ஓமம் எடுத்து அதை தண்ணீரில் நன்றாக ஊற வைத்து குடித்து வந்தால் பசியின்மை நீங்கும்.மேலும் அவர்கள் நன்றாக சாப்பிடுவார்கள்.
பெரியவர்களுக்கு இது மிகவும் பயன் அளிக்கும்.

குழந்தைகளுக்கு ஓமத்துடன் சிறிது தேன் சேர்த்து கொடுப்பதால் அவர்களுக்கு கை கால் வழி நீங்கும் மேலும் பசியின்மையும் நீங்கும்.மேலும் பெண்கள் மாதவிடாய் நேரத்தில் ஓமத்தை வறுத்து பின்னர் அதை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வர வேண்டும்.

பற்களில் ஏதேனும் வலி ஏற்பட்டால் இந்த ஓமத்தண்ணீரை குடிப்பதால் பல் வலி நின்று விடும்