Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அற்புதம் தரும் லவங்கப்பட்டை:! இப்படி சாப்பிட்டால் உங்களை எந்தவிதமான நோயும் அண்டாது!

அற்புதம் தரும் லவங்கப்பட்டை:! இப்படி சாப்பிட்டால் உங்களை எந்தவிதமான நோயும் அண்டாது!

பொதுவாகவே நாம் இலவங்கப்பட்டையை உணவுகளில் வாசனைக்காக மட்டுமே சேர்க்கப்படுவது வழக்கம்.ஆனால் இந்த லவங்கப்பட்டையானது சித்த வைத்தியம் முதல் ஆங்கில வைத்தியம் வரை அற்புதம் மூலிகையாக பயன்பட்டு வருவது எத்தனை பேருக்கு தெரியும்? லவங்கப் பட்டையை சாப்பிடுவதால் நம் உடலில் ஏற்படும் அதிசயங்களைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

லவங்க பட்டையின் பயன்கள்:

நாம் வாசனைக்காக சேர்க்கப்படும் ஏலக்காய்,லவங்கப்பட்டை,உள்ளிட்ட அனைத்து நறுமணப் பொருட்களும் உடலின் சீரண கோளாறுகளை சரிசெய்ய மிகவும் பயன்படுகின்றது.

லவங்க பொடியை தேனுடன் கலந்து சாப்பிடுவதனால் மூன்று மணிநேரத்தில் உங்கள் உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்து விரைவில் உடல் எடையை குறைக்க பயன்படுகின்றது.

இதயம் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் லவங்கப்பட்டை குணப்படுத்துகின்றது.தினமும் காலையில் தேனுடன் லவங்க பொடியை கலந்து உணவோடு சேர்த்து சாப்பிட்டால்,மாரடைப்பு வரவே வராது.

அரை டீஸ்பூன் லவங்க பொடியுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து வெந்நீரில் கலக்கி குடித்தால்,சைனஸ்,ஆஸ்துமா உள்ளிட்ட அனைத்து நுரையீரல் பிரச்சினைகளும் முற்றிலும் நீங்கும்.

இரண்டு டீஸ்பூன் லவங்க பொடி,ஒரு டீஸ்பூன் தேனை,வெந்நீரில் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி கீழ்வாதம் மூட்டு வலி தசை வலி போன்ற அனைத்து பிரச்சனைகளையும் சரிசெய்யும் மேலும் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும்.

லவங்க பட்டையை அரைத்துப் பொடியாக்கி,இந்தப் பொடியில் தினமும் பல் துலக்கி வந்தோமேயானால்,பல் சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளும் நீங்கும்.சொத்தைப் பல் வலியை நொடியில் குணப்படுத்தும் சக்தி லவங்கப்பட்டையிருக்கு உண்டு.

லவங்கப் பொடியுடன் தேனை வெந்நீரில் கலந்து தினமும் காலை மாலை என இருவேளை குடித்து வருகையில்,ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீர் படுத்தி நீரிழிவு நோயை முற்றிலுமாக குணப்படுத்திவிடும்.

 

 

 

Exit mobile version