காலையில் வெறும் வயிற்றில் வெந்தய டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!

0
158
#image_title

காலையில் வெறும் வயிற்றில் வெந்தய டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!

வெந்தய டீ மிகச்சிறந்த மலமிளக்கியாக செயல்படும். ஆகவே மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் இருக்க நினைப்பவர்கள், தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள்.

வெந்தய டீயில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. வெந்தய டீ உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைப்பதோடு, அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுத்து, உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

வெந்தய டீ தயாரிக்கும் முறை:

ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் வெந்தயத்தை சிறிது சேர்த்து மூடி வைத்து நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும். பின் அதை வடிகட்டி தேன் சேர்த்து கலந்து சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ குடிக்கலாம்.

ஆண்கள் மற்றும் பெண்கள் தினமும் வெந்தய டீ குடிப்பதன் மூலம் அவர்களின் பாலியல் வாழ்க்கை சிறக்கும். விரைவில் கருத்தரிக்க வெந்தையடி உதவி புரிகிறது.

மூட்டு வலி, முழங்கால் வலி உள்ளவர்களின் பிரச்சனைக்கும் இந்த வெந்தய டீ சிறந்த தீர்வை தரும். அதே நேரத்தில் வெந்தய டீயை சூடாக குடித்தால், வாய்ப்புண், தொண்டைப்புண் சரியாகும்.

இருமல் குணமாக வெந்தயத்தோடு திப்பிலி, சுக்கு, தூதுவளை சேர்த்து கஷாயம் செய்து அருந்தலாம்.

ஒவ்வொருவர் உடல்நிலையை பொறுத்து அவர்கள் அன்றாடம் எடுத்துகொள்ள வேண்டிய அளவு தீர்மானிக்கலாம். கொழுப்பு சத்து உடலில் அதிகமாக இருந்தால் அவர்கள் தினசரி 10 முதல் 30 கிராம் வரை வெந்தயத்தை எடுத்துகொள்ளலாம்.