நம் தமிழர்களைப் பொருத்தவரை “உணவே மருந்து” என்னும் கருத்தைக் கொண்டு ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு சீரான உடல் அமைப்போடு வாழ்ந்து வந்தனர். இப்படியாக நாம் எடுத்துக்கொள்ளும் உணவை உட்கார்ந்துகொண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை காண்போம்.
உட்கார்ந்து கொண்டே சாப்பிடுவதால் நம் ஜீரண சக்தி அதிகரிக்கும். இதனால் செரிமான கோளாறுகள் ஏற்படாது. இதன் மூலம் நமக்கு தேவையற்ற நேரங்களில் ஏற்படும் பசியை கட்டுப்படுத்தலாம். அதோடு மட்டுமல்லாமல் நாம் உட்கார்ந்து கொண்டு சாப்பிட்டாள் நமக்கு வயிறு நிறைந்தவுடன் நம் மூளைக்கு சிக்னல் அனுப்பப்படும்.
தரையில் அமர்ந்து சாப்பிடுவதனால் நமக்கு சீக்கிரம் வயிறு நிறைந்த உணர்வு ஏற்படும். ஆனால் உடல் பருமன் ஏற்படாது. அதோடு மட்டுமல்லாமல் உட்கார்ந்துகொண்டு சாப்பிடுவதனால் நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் சத்துக்கள் அதிக அளவில் நரம்பு மண்டலத்திற்கு சென்றடையும்.
நாம் அமர்ந்து கொண்டு சாப்பிடும் பொழுது நமது கீழ் முதுகு,வயிறு,இடுப்பு போன்ற பகுதிகள் அனைத்தும் நேராக இருப்பதனால் எந்த அசௌகரியமும் நம் உடம்பிற்கு ஏற்படாது. இதனால் அப்பகுதிகளில் உள்ள தசைகள் வலுவடையக் கூடும். அத்துடன் செரிமானமும் சீராக இருக்கும்.
உட்கார்ந்து சாப்பிடும் பொழுது முழங்கால்களை மடக்கி வைத்திருத்தல் மூலமாக அப்பகுதியில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கலாம். இதனால் முழங்கால்கள் வலுவடையும். உட்கார்ந்துகொண்டு சாப்பிடுவதனால் நமக்கு இடுப்பு வலி ஏற்படாது.
நாம் சம்மணங்கால் போட்டு அமர்ந்திருப்பதால் இரத்த ஓட்டம் நம் இதயத்தை நோக்கி இருக்கும். இது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. அதோடு மட்டுமல்லாமல் கணுக்கால் மற்றும் கால்களில் உள்ள தசைகளும் வலுப்படுகிறது.
இவ்வாறு நாம் உட்கார்ந்து சாப்பிடும் பொழுது நம் உடல்களில் பெரும்பாலான பகுதிகள் நல்ல ஆரோக்கிய பலன்களை அடைகிறது. எனவே வெளிநாட்டு கலாச்சாரமான டைனிங் டேபிளில் அமர்ந்து உண்ணும் பழக்கத்தைத் முடிந்த அளவு தவிர்த்து நாம் சம்மணங்கால் போட்டு அமர்ந்து சாப்பிட வேண்டும்.
என்னது உட்கார்ந்துகொண்டே சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா !
