செம்பருத்தி இலையில் இவ்வளவு நன்மைகளா !

0
348

நம்மில் பலருக்கு தெரியும் செம்பருத்தி பூவில் உருவாகும் தேநீர் நம் உடலுக்கு பல நன்மைகளை உருவாக்கும். அதிலும் இதயத்திற்கு செம்பருத்தி பூவின் தேநீர் பல பயன்களை ஏற்படுத்திக் கொடுக்கும். ஆனால் செம்பருத்தி இலையிலும் அதற்கு நிகரான சத்துக்களும் ஆரோக்கிய குணங்களும் உள்ளது.

செம்பருத்தி இலைகள் புற்றுநோய்க்கு எதிராக போராடும் சக்தி கொண்டமையால் அவற்றை தேநீர் வைத்து குடித்து வரலாம். அதனால் உள்ளிருந்து புற்றுநோயை குணமாக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் புற்றுநோயால் உடலில் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதற்கு செம்பருத்தி இலையை அரைத்து அந்த பேஸ்டை நாம் காயங்களின் மீது தடவலாம்.

அதுமட்டுமல்லாமல் செம்பருத்தியில் இலையை உட்கொள்வதன் மூலமாக நம் ஜீரண சக்தி அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிகளைக் குறைக்க உதவும். உடல் குளிர்ச்சிக்கு வழிவகுக்கும். இந்த இலைகள் உடலில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைப்பதற்கு உதவுகிறது.

செம்பருத்தி இலைகளில் வைட்டமின் சி மிகுதியாக காணப்படுவதனால் இது சளி இருமல் போன்ற பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் செம்பருத்தி இலைகளை உட்கொள்வதனால் அது நம் உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரித்து ஜீரண சக்தியை வலுப்படுத்துகிறது. இதனால் உடலில் செரிமானம் சரியான விகிதத்தில் நடைபெறும்.

ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் செம்பருத்தி இலைகளை அழகுக்கும் பயன்படுத்துவர். செம்பருத்தி இலையில் நம் கூந்தலுக்கு வளர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய நிறைய சத்துக்கள் உள்ளது. இந்த இலையை அரைத்து தலைக்கு தடவி வந்தால் அதன் மூலமாக முடி நீளமாக வளர்வது மட்டுமல்லாமல் நல்ல அடர்த்தியாகவும் காணப்படும்.

சிறுநீரக பிரச்சனை மற்றும் செரிமானப் பிரச்சனை உள்ளவர்களுக்கு செம்பருத்தி இலை ஒரு நல்ல தீர்வாக இருக்கும். அதோடு மட்டுமல்லாமல் இது சிறுநீரகக் கோளாறுகளையும் சரி படுத்துகிறது. கெட்ட கொழுப்பை குறைப்பதற்கும் இந்த இலைகள் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது.