Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

21 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டால் நடக்கும் அதிசயம் தெரியுமா??

#image_title

21 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டால் நடக்கும் அதிசயம் தெரியுமா??

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழத்தில் பல வகைகள் உள்ளது. அதில் ஒன்றுதான் செவ்வாழை. இந்த பழத்தை தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பல நன்மைகள் நமது உடலில் உண்டாகும்.
செவ்வாழை பழம் பல சத்துக்களை தன்னுள் கொண்டுள்ளது. செவ்வாழையில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது இது சிறுநீரக கல் ஏற்படுவதை தடுக்கிறது.
தினமும் காலையில் செவ்வாழை பழம் சாப்பிடுவதால் நாள் முழுவதும் சுறுசுறுப்பும், உற்சாகமும் ஏற்படும். மூளை விழிப்புணர்வுடன் இருக்க செய்வதில் செவ்வாழை உதவுகிறது.
இதில், வைட்டமின் சி, நார்சத்து, ஆன்டி ஆக்சிடன்ட் போன்ற சத்துக்கள் உள்ளது.
நரம்பு தளர்ச்சியால் பாதிக்க்பட்டவர்கள் தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி சரியாவதுடன் ஆண்மை சீரடையும்.
Vayathu முதிர்வால் ஏற்படும் கண்பார்வை குறைபாடு, 21 நாட்கள் தொடர்ந்து செவ்வாழை பழம் சாப்பிட்டால் கண் நன்றாக தெரியும். இது கண்புரை ஏற்படுவதையும் தடுக்கிறது.
இதுமட்டுமில்லாமல் பல்வழி, பல்லசைவு போன்ற பிரச்சினைகளை தடுக்கிறது. ஆடிய பற்கள் கூட செவ்வாழை பழத்தை 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கெட்டியாகும் என சொல்லப்படுகிறது.
சொரி, சிரங்கு, வெடிப்பு போன்ற சரும பிரச்சினைகளும் இதில் குணமாகும் . சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும் செவ்வாழையை தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டு வர நோய் குணமாகும்.

Exit mobile version