Mudakathan Keerai : மூட்டுவலியை போக்கும் முடக்கத்தான் கீரை..! இயற்கையின் வழியில் பக்காவான 10 டிப்ஸ்..!!

0
341
Mudakathan Keerai Benefits in Tamil

மூட்டுவலியை போக்கும் முடக்கத்தான் கீரை குறித்தும் அதைபயன்படுத்தி  இயற்கையின் வழியில் மூட்டு வலியை (Mudakathan Keerai Benefits in Tamil) குணப்படுத்தும் பக்காவான 10 டிப்ஸ்.

மூட்டுவலியை போக்கும் டிப்ஸ்:

இயற்கை கொடுத்த மருத்துவத்தில் முடக்கத்தான் கீரையும் ஒன்றாகும். முடக்கு (முடக்குவாதம்) என்றால் நோயை குறிக்கும் சொல்லாகும். முடக்கு + அற்றான் என்றால் நோய் தீர்ப்பான் என்று பொருள். அதாவது நம் உடலில் உள்ள நோய்களை எளிதில் தீர்க்கும் மருந்தாகியதால் முடக்கத்தான் என்று பெயர் பெற்றது.

முடக்கத்தான் கீரையின் 10 பயன்கள் : Benefits Of Mudakathan Keerai

  • முடக்கத்தான் கீரையை மிதமாக குழைந்து வரும் நிலையில் அரைத்து தேங்காய் எண்ணெய் அல்லது ஆமணக்கு எண்ணெய் சேர்த்து மூட்டுவலி இருக்கும் இடங்களில் பத்து (வைத்திய முறை) போட வேண்டும். இதனால் மூட்டுவலி மற்றும் வீக்கம் இருந்தாலும் குறைந்துவிடும்.
  • கீரையை கொதிக்க வைத்து சூப் குடிக்கும் முறையில் வாரம் இரண்டு முறை குடித்து வந்தால் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, மூட்டுவாதம் போன்றவை வராமல் தடுக்கும்.
  • தோசை மாவுடன் கலந்து சுவையான தோசையாக உண்ணலாம் அல்லது கேழ்வரகு மாவில் வெல்லத்துடன் சேர்த்து கீரையை அடைதட்டி சாப்பிட்டு வந்தால் எலும்புகள் கூடும் இடங்களில் மூட்டுவலி என்ற பேச்சுக்கே இடமில்லை.
  • முடக்கத்தான் கீரையில் உள்ள தாலைட்ஸ் என்னும் இயற்கை வேதிப்பொருள், மூட்டுகளில் இருக்கும் தேவையற்ற யூரிக் அமிலத்தை கரைத்து சிறுநீராக வெளியேற்றுகிறது. இந்த சோதனையை இந்திய மற்றும் ஆஸ்திரேலிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும் இணைந்து கண்டுபிடித்தனர்.
  • கீரையை அளவான நெய்யில் வதக்கி அதனுடன் கொத்தமல்லி, உளுந்தம் பருப்பு, பெருங்காயம், இஞ்சி போன்றவற்றை சேர்த்து துவையல்போல சமைத்து வாரம் இரண்டுமுறை உண்டு வந்தால் மூட்டு சம்பந்தபட்ட நோய்கள் குணமாகும்.
  • முடக்கத்தான் கீரையை பொடியாக நறுக்கி எடுத்து அதனுடன் மிளகு, சீரகம் சேர்த்து ஆரோக்கியமும், சுவையும் நிறைந்த ரசம் வைத்து குடிக்கலாம்.
  • பாசிப்பருப்பு, துவரம் பருப்பு மற்றும் கல்ல பருப்பை கீரையுடன் கலந்து கூட்டு சமைத்து உண்டால் மூட்டு வலிகள் தீரும்.
  • வீக்கமான கட்டிகள் இருந்தால் முடக்கத்தான் கீரையை பாதியளவு அரைத்து கட்டுபோட்டால் விரைவில் கட்டிகள் உடைந்துவிடும்.
  • நீண்ட நாட்களாக வாயுத்தொல்லை உடையவர்கள் இந்த கீரையை பொரியல் செய்து சாப்பிட்டால் வாயுத்தொல்லை நீங்கும். வயிற்றுப் புண் அல்லது அல்சர் இருந்தாலும் குணமாகும்.
  • முடக்கத்தான் கீரையை காயவைத்து பொடியாக்கி குளிக்கும்போது பயன்படுத்தினால் தோல் பிரச்சினைகள் வராமல் தடுக்கும்.

குறிப்பு: இந்தியாவில் 65% மக்கள் மூட்டு வலியால் பாதிக்கப்படுகின்றனர். இதில் 85% பெண்களாவர். ( கீரையை பச்சையாக அதிகம் சாப்பிட்டால் பேதியாகும், சரியான ஆலோசனையின்படி உண்ணவும்)