Neem Brush Vs Toothbrush: நம்ப ஆளுங்க கண்டுபிடித்த பிரஷ்..!

0
221
#image_title

Neem Brush Vs Toothbrush: பொதுவாக நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் ஒரு பழமொழி நாம் கேள்விப்பட்டிருப்போம். அது என்னவென்றால் ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்று. ஆமாம் நமது முன்னோர்களின் காலத்தில் நாம் இப்போது பயன்படுத்தும் எந்த ஒரு நவீனமான பிரஷூம் கிடையாது. அவர்கள் ஆலங்குச்சி, வேப்பங்குச்சி ஆகியவற்றை கொண்டு பல்துலக்கி வந்தனர். சீனாக்காரன் மூங்கிலை கொண்டு பிரஷ் கண்டுப்பிடிப்பதற்கு முன்பே நம் முன்னோர்கள் இந்த வேப்பங்குச்சி பிரஷ் கண்டுப்பிடித்துவிட்டார்கள்.

நமது தாத்தா, பாட்டி எல்லாம் வயதானாலும் அவர்களின் பற்கள் அவ்வளவு வலிமையாக இருந்து. தற்போதும் கிராமங்களில் நமது பெரியவர்கள் இன்றளவும் ஆங்காங்கே இந்த வேப்பங்குச்சி கொண்டு பல் துலக்கி வருவதை நாம் காணலாம்.

வேப்பங்குச்சி

பொதுவாக வேப்பமரத்தில் உள்ள அனைத்துமே மருத்துவக்குணம் நிறைந்தது. இந்த குச்சியைக்கொண்டு பல் துலக்கி வந்தால் அந்த குச்சியில் இருந்து வேப்ப எண்ணெய் சுரந்து பற்களுக்கு வலிமையை சேர்க்கிறது. வேப்பங்குச்சியால் பல் துலக்கினால் (Benefits of Neem Brush) வாய் துர்நாற்றாம் ஏற்படாது. வேப்பங்குச்சி பிரஷாகவும், பேஸ்டாகவும் பயன்படுகிறது. வேப்பங்குச்சி கசப்பு தன்மையாக இருப்பதால் பற்களில் பூச்சிகள் இருந்தால் அதனை உடனடியாக மரணிக்க வைக்கிறது.

வேப்பங்குச்சியை (How To Use Neem Stick For Teeth) முதலில் கடித்துக்கொண்டு அதனை மேலும், கீழுமாக பற்களில் வைத்து ப்ரஷ் போல் பல் துலக்க வேண்டும். ஆரம்பத்தில் அது சிரமமாக இருக்கலாம்.

எப்படி சாத்தியம்?

வேப்பங்குச்சியை கொண்டு எல்லோராலும் பல் துலக்குவது சாத்தியமற்றது. காரணம் வேப்பங்குச்சி நகரங்களில் கிடைப்பது என்பது சிரமம். மேலும் இந்த வேப்பங்குச்சியை காய வைத்து  அதன் பிறகு பேக் செய்து இதனை விற்பனை செய்ய முடியாது. பச்சையாக தான் குச்சியை உபயோகப்படுத்த முடியும். மேலும் இந்த வேப்பங்குச்சியை வைத்து அனைவரும் பல் துலக்க ஆரம்பித்துவிட்டால் அதிக அளவிளான மரங்களை வெட்டும் சூழ்நிலை ஏற்படும். எனவே நவீன பிரஷ்களால் (பிளாஸ்டிக்) ஏற்படும் சுற்றுச்சூழலை தவிர்க்க, வேப்பங்குச்சியில் பல் துலக்குவது நன்மை பயக்கும். இருந்த போதிலும் இதனை கருத்தில் கொண்டு வீட்டிற்கு ஒரு வேப்பமரம் வளர்த்தால் மேலும் நன்மையே.

மேலும் படிக்க: வறட்டு இருமலால் தொடர் அவதியா.. இதை 1 முறை மட்டும் குடியுங்கள்!! இனி அந்த பிரச்சனைக்கு இடமே இருக்காது!!