Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

Oil pulling in Tamil: ஆயில் புல்லிங் செய்பவரா நீங்கள்? ஆயில் புல்லிங் செய்வதால் ஏற்படும் நன்மைகள்..!!

Oil pulling in Tamil

Oil pulling in Tamil: நமது உடலில் ஏதாவது நோய் தொற்று ஏற்பட்டவுடன் நாம் மருத்துவரிடம் செல்வோம். அவர் முதலில் உங்களை வாயை காட்டுங்கள் என்று சொல்லி வாய் பகுதியை பரிசோதனை செய்து பார்ப்பார். இதற்கு காரணம் என்னவென்றால் நமது உடல் பகுதியில் ஏதாவது நோய் தொற்று ஏற்பட்டால் அதற்கு முதல் காரணம் நம் வாய்பகுதியாக தான் இருக்கும்.

தொற்று ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியா, வைரஸ்களை முதலில் நமது உடலுக்குள் செல்ல அனுமதிப்பது இந்த வாய் பகுதிதான். இந்த ஆயில் புல்லிங் என்பது பாரம்பரியமான ஒரு மருத்துவ முறையாகும். இதனை செய்வதன் மூலம் நமது உடலுக்கு எவ்விதமான நன்மைகள் கிடைக்கிறது என்று (Oil pulling eppadi seivathu) பார்க்கலாம்.

ஆயில் புல்லிங் – Oil pulling in Tamil

ஆயில் புல்லிங் என்பது பண்டைய ஆயுர்வேத சிகிசச்சை முறை. அதனை நாம் வீடுகளிலேயே இந்த சிகிச்சையை செய்யலாம். இதன் மூலம் ஆஸ்துமா, தலைவலி, பற்களில் சொத்தை வராமல் தடுக்கப்படுகிறது. பற்களில் ஈறுக்களில் இரத்தம் வடிதல், வீசிங், அழற்சி, முக்கியமாக வாய் துர்நாற்றம் வராமல் தடுக்கப்படுகிறது. மேலும் ஆயில் புல்லிங் செய்வதால் பற்கள் நிறம் மாறாமல் இருக்கும்.

நன்மைகள்

எந்த எண்ணெய் பயன்படுத்துவது

தேங்காய் எண்ணெய்
நல்லெண்ணெய்
சூரிய காந்தி எண்ணெய்

எவ்வளவு நிமிடம் ஆயில் புல்லிங் செய்ய வேண்டும்

குறைந்தது 15 நிமிடங்கள், அதிகப்பட்சமாக 20 நிமிடங்கள் வாயில் 2 ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்றி மெதுவாக கொப்பளிக்க வேண்டும்.

எப்பொழுது ஆயில் புல்லிங் செய்ய வேண்டும்

காலை வெறும் வயிற்றில் ஆயில் புல்லிங் செய்ய வேண்டும். அதாவது பல் துலக்குவதற்கு முன்பு ஆயில் புல்லிங் செய்ய வேண்டும். அதன் பிறகு உப்பு தண்ணீர் கலந்து வாய் கொப்பளிக்கலாம். அதன் பிறகு நீங்கள் பல் துலக்கலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த ஆயில் புல்லிங் செய்யலாம்.

மேலும் படிக்க: நெஞ்சு எரிச்சல் புளித்த ஏப்பம் சாப்பிட்டது நெஞ்சிலேயே நிற்கிறதா? இதை குடிங்க இனி Acidity வராது..!

Exit mobile version