Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தூக்கமின்மையா? ஆரஞ்சு பழத்தொட இத கலக்கி குடிச்சா டக்குனு தூக்கம் வரும்!

தற்போதைய காலகட்டத்தில் தூக்க மாத்திரை போட்டும் சரியாக தூக்கம் வராதவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர்.மனஅழுத்தம்,வொர்க் ஸ்டிரஸ்,போன்ற காரணங்களால் நிறைய பேருக்கு இரவில் தூக்கமின்மை ஏற்படுகின்றது.அதிலும் தற்போது சிலபேர் நைட் டியூட்டி செய்வதாலும் தூக்கமின்மை ஏற்படுகின்றது. இரவில் ஆரஞ்சு பலத்தோடு இதனை கலக்கி குடித்தால் விரைவாக தூக்க நரம்புகள் தூண்டப்பட்டு உங்கள் தூக்கமின்மை பிரச்சனையை சரிசெய்யலாம்.

பொதுவாகவே ஆரஞ்சு பழத்தில் பொட்டாசியம் கால்சியம் வைட்டமின் சி சத்துக்கள்,இரும்புச் சத்து, பாஸ்பரஸ்,போன்ற பல சத்துக்கள் ஒரு ஆரஞ்சுப் பழத்தில் இருக்கின்றன.

இவை அனைத்தும் இதயத்தைப் பலப்படுத்தவும் ரத்த நரம்புகளில் சீரான இயக்கத்திற்கும்,எலும்புகளின் வளர்ச்சி மற்றும் உறுதி போன்ற ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திற்கு இந்த ஆரஞ்சுப் பழம் பயன்படுகிறது.

தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் இரவு தூங்க செல்லும் முன்பு ஆரஞ்சுப் பழச்சாற்றில் சிறிது அளவு தேன் கலந்து குடித்தால் தூக்கம் நரம்புகள் தூண்டப்பட்டு நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.அதுமட்டுமின்றி ஆரஞ்சு பழத்தில் தேன் கலந்து குடித்து வந்தால் உடலில் நோய்யெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு நரம்புகளும் பலம் பெறும்.

Exit mobile version