Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பனங்கற்கண்டு சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் நன்மைகள்!

 

பனை மரத்தில் இருந்து தயாரிக்கும் ஒவ்வொரு பொருளும் நமக்கு அதிக பயன்களை அள்ளித்தருகிறது.வேர் முதல் நுனி வரை பனையின் ஒவ்வொரு பகுதியும் நமக்கு பயன் தருபவை. இந்த பனைமரம் 60 ஆண்டு காலம் வாழும். அனைத்து விதத்திலும் நன்மை அளிப்பதால் இதனை தேவலோகத்து கற்பகத்தரு மரத்திற்கு ஒப்பிட்டுக் கூறியுள்ளனர்.

1. பனங்கற்கண்டு, வாதம், பித்தம் நீக்கும். பசியை தூண்டும். புஷ்டி தரும். நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது.

2. தமிழகத்தில், பனை மரத்தின் வெல்லத்தை இரு வகையாக சொல்வார்கள். முற்றிலும் சுத்தப்படுத்தாத, கெட்டியான கரு நிற வெல்லத்தை கருப்பட்டி என்பர். இதை சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாக்குவது சர்க்கரை, பனங்கற்கண்டு எனப்படும்.

3. பாலில், பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால், மார்புச்சளி இளகும். முக்கியமாக தொண்டைப்புண், வலி இவை அகலும்.

4. பனங்கற்கண்டு, உடல் உஷ்ணம், நீர் சுருக்கு, காய்ச்சலால் ஏற்படும் வெப்பம் இவற்றுக்கு நல்லது. பனை நீரிலுள்ள சீனி சத்து, உடலுக்கு தேவையான வெப்பத்தை தருகிறது.

5. இதிலிருக்கும் குளுக்கோஸ், மெலிந்து, தேய்ந்து வாடிய உடலுடைய குழந்தைகளின் உடலை சீராக்கி, நல்ல புஷ்டியை தருகிறது.

6. வயிற்றுப் புண்ணை குணப்படுத்தி, ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது.

7. டைபாய்டு, சுரம், நீர்க்கட்டு முதலிய வியாதிகளை போக்குகின்ற நல்ல மருந்தாகவும் இது செயல்படுகிறது.

8. இதிலிருக்கும் கால்சியம், பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு, பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது.

9. இதிலிருக்கும் இரும்புச்சத்து, பித்தத்தை நீக்கி சொறி, சிரங்கு உள்பட சகல தோல் வியாதிகளையும் நீக்குவதுடன், கண் நோய், ஜலதோஷம், காசநோய் இவைகளையும் நீக்குகிறது.

இவ்வாறு எண்ணற்ற பயன்களை கொண்டது பனங்கற்கண்டு வெள்ளை சர்க்கரையைத் தவிர்த்து விட்டு பனங்கற்கண்டு வாங்கி உபயோகப்படுத்தி உங்களது உடலுக்கு நன்மையே செய்து கொள்ளுங்கள்.

Exit mobile version