Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கை வைத்தியத்தில் சிறந்த பலன் தரும் மிளகு வைத்தியம்

வீட்டின் சமையலறையே மருத்துவகூடமாக நம் முன்னோர்கள் வைத்திருந்தார்கள்.அஞ்சறை பெட்டி என்பது நோய்களுக்கு அஞ்சாமல் அதைனை தீர்த்துவைக்கும் அருமருந்தாக செயல்பட்டது. அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் அனைத்து பொருட்களுமே ஒவ்வொரு வகையில் முக்கியமானவையே. அதில் ஒன்று மிளகு. மிளகின் பயன்களைப் பற்றி இப் பதிவில் காணலாம்.

மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்பது பழமொழி. மிளகிள் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், தையமின், ரைபோப்ளேவின், நியாசின் போன்ற சத்துக்கள் உள்ளடக்கி உள்ளது. சளி, ஜலதோஷம் பிரச்சனை இருக்கும்போது உணவில் மிளகு அதிகம் சேர்க்கும் வழக்கம் உண்டு.

அதே போன்று வரட்டு இரும்பலுக்கு வெறும் மிளகை வாயில் போட்டு மென்றால் நல்லப் பயனைத் தரும்.

மேலும் பசியின்மை செரிமானம் போன்ற பிரச்சினைகளை தீர்க்க மிளகை பயன்படுகிறது.

அடிக்கடி தலைவலி பிரச்சனையால் சிரமப்படுவார்கள் மிளகை அரைத்து நெற்றியில் பற்று போட்டு வருகையில் தலைவலி குணமாகும்.

தலையில் புழுவெட்டு பிரச்சினை இருப்பவர்கள் இயற்கை முறையில் தீர்வு காண மிளகு சிறந்த வைத்தியம் ஆகும்.

கோழி ரசத்தில் மிளகு அதிகம் சேர்ப்பின் நுரையில் சமதமான பிரச்சனை நீங்கும்.

Exit mobile version