Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பெங்களூரில் சமூக இடைவெளியுடன் மாற்றியமைக்கப்பட்ட உணவகம் – இந்த ஐடியா நல்லாருக்கே!

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு உலக அளவில் பொதுமக்களின் அன்றாட பழக்க வழக்கங்களில் பல மாற்றங்களை மேற்கொள்ள வேண்டிய நிலையை கொரோனா நோய்த் தொற்று ஏற்படுத்தியுள்ளது.

வெளியில் செல்லும் போது முக கவசம் அணிவது, கிருமி நாசினி பயன்படுத்துவது, கூட்ட நெரிசலை தவிர்ப்பது, பொதுமனித இடைவெளியை கடைபிடிப்பது போன்றவற்றை பின்பற்றுவது அவசியமாகி விட்டது.

இந்நிலையில் மக்கள் அதிகம் கூடும் உணவகங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவற்றில் தனி மனித இடைவெளியை எப்படி கடைபிடிப்பது என்று பலவேறு யோசனைகளை அரசு ஆராய்ந்து வருகிறது.

தற்போது இதில் முன் மாதிரியாக கர்னாடகத்தை சேர்ந்த உணவகத்தில் உணவு மேஜையின் மத்தியில் கண்ணாடி அமைத்து தனி மனித இடைவெளியை பின்பற்றும் வகையில் மாற்றியமைத்துள்ளது வரவேற்பை பெற்று வருகிறது. இந்த யோசனையை அனைத்து உணவகங்களும் பின் பற்றலாமே என இந்த புகைப்படத்தை நெட்டின்கள் பகிர்ந்து வருகின்றனர்.

Exit mobile version